பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். 71 புலிகேசிக்குப் பிறகு சாளுக்கிய அரியணையில் அமர்ந்த அவன் மகள் விக்கிரமாதித்தன், பல்லவர் கையில் தன் தந்தை அடைந்த இழிவையும், தன் தலைநகர் அடைந்த அழிவையும் போக்குவது இன் கடன் எனக் கருதினான்; பல்லவ நாட்டின் மீது படையெடுத்தன், அப்போது பல்லவநாட்டு ஆட்சிப்பொறுப்பு, பரமேசுவரவர்மன் கையில் இருந்தது; இப்போர் குறித்துச் சாளுக்கியர் பட்டயங்கள் கூறும் செய்தியும், பல்லவர் பட்டயம் கூறும் செய்தியும் முரண்பாடாகவே உள்ளன. "பூரீவல்லபனாகிய விக்கிரமாதித்தன், நரசிம்மவர்மனது பெருமையை அழித்தான்; மகேந்தி ன் செல்வாக்கை அழித்தான்; ஈசுவரபோத்தரசனை வென்றான்; இவன் மகாமல்லன் மரபை அழித்தமையால் 'இராசமல்லன்' எனும் விருதுப்பெயர் கொண்டான் தென்நாட்டின் ஒட்டி யாணமாக விளங்கும் காஞ்சியைக் கைப்பற்றினான் என்றும் 'பல்லவர்கோவைத் தோற்கடித்த பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சியை அடைந்தான்” என்றும், "தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்' என்றும் சாளுக்கியர் பட்டயங்கள் கூறுகின்றன. "பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக்கொண்ட விக்கிரமாதித்தனைக், கந்தையைச் சுற்றிக்கொண்டு ஒடும்படிச் செய்தான்' என்றும் "பரமேசுவரவர்மன், பெருவளநல்லூரில் நடந்த பெரும் போரில் வல்லபன் படையை முறியடித்தான்" என்றும் , "பரமேசுவரவர்மன் சாளுக்கிய அரசனது பகைமையாகிய இருளை அழிக்கும் பகைவனாக இருந்தான்' என்றும் பல்லவர் பட்டயங்கள் பாடுகின்றன. இவ்விருவேறு சான்றுகளையும் கண்ட வரலாற்று ஆசிரியர்கள், விக்கிரமாதித்தன் காஞ்சியைத் தாக்கி அதைக் கைப்பற்றிக்கொண்டு, காவிரி வரை சென்று உறையூரில் தங்கினான்: அவ்வாறு தங்கி இருந்தவன் வாளா இராது,