பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காலந்தோறும் தமிழகம் காவிரிக்கு வடக்கே உள்ள பாண்டியநாட்டின் மீது போர். தொடுத்தான். அப்போது பாண்டி நாட்டு அரசனாக விளங்கிய நெடுமாறன், சாளுக்கியர் படையெடுப்பு பொறாது விக்கிரமாதித்தனை எதிர்த்தான்: நெல்வேலியில் நடந்த போரில் சாளுக்கியனிடம் தோற்றான்: இதற்கிடை யில், காஞ்சியில் சாளுக்கியனிடம் தோற்ற பரமேசுவர பல்லவன், தன் படைவலியைப் பெருக்கிக்கொண்டு வந்து, உறையூர்க்கு அருகில் உள்ள பெருவள நல்லூரில், விக்கிர மாதித்தனை எதிர்த்துப் போரிட்டு வென்றான். பாண்டியர் படையால் முன்பே வலிவிழந்து போன சாளுக்கியன் பல்லவர் தாக்குதலைத் தாங்கமாட்டாது தாயகம் நோக்கி விரைந்தனன் என்ற இப்போர் முடிவிற்காக வந்துள்ளனர். தன் தந்தையும், தானும் பல்லவர் கையில் தோல்வி புற்றதை எண்ணி எண்ணி மனம் புழுங்கிய சாளுக்கிய விக்கிரமாதித்தன், இறக்கும் திருவாயில், தன் மகன் விநயாதித்தனை அழைத்துப் பல்லவரால், சாளுக்கியர் குடிக்கு நேர்ந்திருக்கும் இழிவைத் துடைக்குமாறு பணித் தான். 'விநயாதித்தின் தன் தந்தை கட்டளைப்படி, திரை யராச பல்லவனது முழுப்படையையும் கைப்பற்றினான்' எனச் சாளுக்கியப்பட்டயம் ஒன்று கூறுகிறது. சாளுக்கிய அரியணையில், விநயாதித்தன் வீற்றிருந்த போது, பல்லவ அரியணையில், இராசசிம்மன் வீற்றிருந்தான். இராசசிம்மன் கல்வெட்டுக்கள், அவன் வீரம், போர்த்திறம் முதலாயினபற்றி விரிவாகக் கூறுகின்றன என்றாலும், அவன் யாருடன் போரிட்டான்; எங்கு நடந்தது அப்போர் என்பன போலும் விளக்கங்களை அளிப்பன அல்ல. ஆகவே, விதயாதித்தன், இராசசிம்மன் காலத்தில் நடந்த சாளுக்கியர் பல்லவர் போர் பற்றிய விளக்கங்களை அறிவதற்கு வாய்ப்பு இல்லை. பல்லவர் அரியணையில் இரண்டாம் நந்திவர்மனும் சாளுக்கியர் அரியணையில் இரண்டாம் விக்கிரமாதித்தனும்