பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 73 அமர்த்ததும், பல்லவர் சாளுக்கியர் போர் மீண்டும் தலை துரக்கலாயிற்று. தெற்கே புதிய பொலிவோடு புத்துயிர் பெற்ற பாண்டியர்களோடு நந்திவர்மன் போரிட்டுக் கொண்டிருக்கும் போது, சாளுக்கிய விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டுள் புகுந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டு ஆங்குள்ள மக்கள் மகிழத்தக்க வகையில் நல்லபல அறப்பணி களை ஆற்றிக்கொண்டிருந்தான். தெற்கே பாண்டியரோடு போரிட்டுக் கொண்டிருந்த நந்திவர்மன், அப்போர்த் தலைமையைத் தின் படைத்தலைவன் உதயசந்திரன் பால் ஒப்படைத்து, வடக்கு நோக்கி வந்து தலைநகர் காஞ்சியில் தங்கியிருக்கும் விக்கிரமாதித்தனை வென்று துரத்தினான் அஃது அறிந்து, விக்கிரமாதித்தன் மகன் கீர்த்திவர்மன் பெரும்படையோடு வந்து, நந்திவர்மனை வளைத்துக் கொண்டான்; அந்நிலையில், பாண்டியரை வெற்றி கொண்ட பல்லவர் படைத்தளபதி உதய சந்திரன், தன் அரசனுக்கு நேர்ந்த தோல்வி அறிந்து, விரைந்து காஞ்சி அடைந்து, சாளுக்கியர் படையைப்பல்லவ நாட்டு எல்லைக்கு அப்பாலும் விரட்டி வெற்றி கொண்டான். சாளுக்கிய கீர்த்திவர்மன், பல்லவர், படைத் தலை னால் சாளுக்கியர் படைக்கு நேர்ந்த தோல்வியாலான இழிவைத்துடைக்கத் துணிந்தான் உடனே பெரும் படையுடன் மீண்டும் பல்லவ நாட்டின் மீது பாய்ந்தான்; இம்முறை, கங்கரும், பாண்டியரும் பல்லவநத்திவர்மனுக்குத் துணை நின்றனர். வெம்பை என்ற இடத்தில் போர் நடை பெற்றது. போரில் ர்ேத்திவர்மன் இறந்தான். இவ்வாறு, மகேந்திரவர்மன் காலத்தில், கி. பி. 610 அளவில் தொடங்கிய பல்லவ சாளுக்கிய போர், இரண்டாம் நந்திவர்மன் காலத்தில், கி. பி. 787 அளவில், ஏறத்தாழ 100 ஆண்டுகள் நடைபெற்று, கீர்த்திவர்மன் மறைவோடு முடிவுற்றது. கா தமி-5