பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பல்லவர் அரசியல் பல்லவர்கள் வடநாட்டிலிருந்து வந்தவர்களாதலின், அவ்வட நாட்டு அரசர்கள் பின்பற்றிய, கெளடல்யரின் அர்த்த சாஸ்திரமும், காமாந்தகரின் நீதி சாஸ்தரமும், சுக்ர நீதியும் சாட்டும் அரசியல் நெறிகளே, பல்லவர் காலத்தமிழகத்திலும் இடம் பெற்றிருந்தன. வடநாட்டு வழக்கை யொட்டித் தங்கள் நாட்டைப் பல இராட்டிரங்களாகவும், இராட்டிரங்களைப் பல விஷயங் களாகவும் பகுத்துக் கொண்ட பல்லவர், தமிழகத்துள் தாம் புகுவதன் முன்னர் நிலை பெற்றிருந்த, கோட்டம், நாடு, ஊர் எனும் பிரிவுகளையும் போற்றி வந்தனர். பல்லவர் வருகைக்கு முன் இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த தொண்டை நாடு, பல்லவர் காலத்திலும் அவ்வாறே பிரிப்புண்டுக் கிடந்தது. தந்தைக்குப் பிறகு மூத்த மகன் என்பதே பல்லவர் அரசமுறை. அரசுக்கு ஏற்ற மகன் இல்லாத காலத்தில், அரசனுடைய உடன் பிறந்தான் மகன் அரசுரிமை பெறுவன். அரசன் மகப்பேறு இல்லாமல் இறந்து போகும் போது, அரசியல் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் முதலியோர், அரச மரபில் வல்வவன் ஒருவனைத் தேர்ந்து முடிசூட்டுவர். இரண்டாம் பரமேசுவர வர்மனுக்குச் சித்திரமேயன் என்ற மகன் இருப்பவும், அவன் நனி இளையன், சூழ்ந்து நிற்கும் பகை ஒழித்துப் பல்லவ நாட்டைக் காக்கும் வலுவற்றவன் என்பதால் அவனை அரியணையில் அமர்த்தாது, பல்லவ