பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 75 மரபில் வேறு ஒரு கிளையைச் சேர்ந்த இரண்யவர்மனை வேண்டி, அவன் மகன் இரண்டாம் நந்திவர்மனை அரியணையில் அமர்த்தியது காண்க. அரசியல் துறையில், தமக்கு அறிவுரை வழங்கவல்ல அமைச்சரிகளைப் பல்லவ வேந்தர்களும் பெற்றிருந்தார்கள். கல்வெட்டுக்களில் அவர்கள் ஆமாத்யர் என அழைக்கப் பெற்றனர். மகேந்திரவர்மன், அப்பரை அழைத்துவரத் தன் அமைச்சரையே அனுப்பினான் என பெரிய புராணம் கூறுகிறது. அமைச்சர்களைக் குறிக்கும் சொற்றொடர் களாக, பிரம்மபூரீ ராஜன்', 'நம்பன் இறையூர் உடையான்' தமிழ்ப் பேரரையன்” என்பன போல்வனவற்றைப் பட்டயங்களும், கல்வெட்டுக்களும் அறிவிக்கின்றன. அமைச்சர்களே அல்லாமல், அவர்களுக்குத் துணையாக "உள்படு கருமத் தலைவர்” எனப்படும் நேர்முகத் தனிச் செயலாளர், "வாயில் கேட்பார்' எனப்படும் செயலாளர் "கீழ் வாயில் கேட்பார்' எனப்படும் துணைச் செயலாளர் உள்ளிட்ட குழுவும் பல்லவர் அரசியலில், இடம் பெற்று இருந்தது. வலியரான் நலிவெய்தி முறை வேண்டி நிற்பார்க்கு, அது வழங்கும் அறங்கூர் அவைகள் பல்லவக் காலத்தில் சிறந்து விளங்கின. சிற்றுார்களில் அமைத்திருக்கும் அறங்கூர் அவைகள் "கரணங்கள்" எனவும், ஆங்குத் தலைமை தாங்கி முறை வழங்குவார். “அதிகாரிகள்” எனவும், பேரூர் அவைகள் அதிகரணங்கள்” எனவும், ஆங்குத் தலைமை தாங்குவார், "அதிகரணப் போசகர்கள்" எனவும், இவை களுக்கெல்லாம் மேலாக, அரசனே அமர்ந்து முறை வழங்கும் அவை "தருமாசனம்’ எனவும் வழங்கப் பெற்றன என்பது கல்வெட்டுக்களால் புலனாகிறது. - ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்ற இம் மூன்று சான்றுகளையும் துணை கொண்டு முறை வழங்கினர். ஆட்சியாவது, நீண்ட காலமாகப் பின் பற்றி வரும் வழக்கம்: