பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காலந்தோறும் தமிழகம் ஆவணமாவது, ஒலை, சுவடி போலும் எழுத்துச் சான்றுகள்: அயலார் காட்சியாவது, நேரில் கண்டார் கூற்று. ஆட் கொள்ள வந்த பெருமான், சுந்தரர் மீது வழக்கு தொடுத்த திருவெண்ணெய் நல்லூர் அறங்கூர் அவை பற்றிப் பெரிய புராணம் கூறும் விளக்கம், பல்லவர்கால அறங்கூரவை நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக உளது. முறை வழங்கும் அறங்கூரவைகளேயல்லாமல் பல்லவ நாட்டின் பேரூர்கள், சிற்றுார்கள் தோறும், ஆட்சி நிறுவின அவைகளும் இடம் பெற்றிருந்தன. அவ்வவைகளில் உறுப் பினராக இருந்து பணி புரிவார், 'ஊரார்' என்றும் "நாட்டார்' என்றும் "ஆள்வார்’ என்றும், பெருமக்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். அவை உறுப்பினர்கள் கூடி எடுக்கும் முடிவைச்செயல்படுத்துவார், “ஆளும் கனத்தார்” என அழைக்கப் பெற்றனர். கோயில் காரியங்களைக் கண் காணிப்பார் "அமிர்த கணத்தார்’ எனப்பட்டனர். ஊரவை உறுப்பினர்கள், தாம் ஆற்ற வேண்டிய பணி நிலைகளுக்கு ஏற்ப, பல குழுக்களாகப் பிரிந்திருந்தனர். அக்குழுக்கள் வாரியம் என வழங்கப்பட்டது; ஏரி வாரியம், தோட்ட வாரியம் என்ற தொடர்களைக் காண்க. பல்லவர் காலத்தில், அரசுப் பண்டாரங்களை நிறை விக்கும் வருவாயில், வரி. பெரும்பங்கு வகித்தது; விளை பொருள், செய் பொருள், செய்தொழில் இவற்றின்மீது விதிக்கப்பட்ட வரிகளின் வகைகளைக் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். தென்னை, பனை வளர்க்கவும், அவற்றில் சாறு இறக்கவும், சாற்றிலிருந்து பாகு பிடிக்கவும் வரி விதிக்கப் பட்டது: செங்கொடி, கருசராங்கண்ணி முதலாம் செடி கண்ளக் கொண்டு மருந்து செய்வார்.முறையே "செங்கொடிக் கானம்', 'கண்ணிட்டுக் காணம்’ என்ற வரிகளைச் செலுத்தியுள்ளனர். கருங்குவளை, செங்குவளை முதலாம் மலர்களை விற்க, 'குவளைக் காணம்" என்ற வரி கட்டியாக வேண்டும். - .