பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 77 உண்பொருள் விற்போர், உடை நெய்வோர், விற்போர் குயவர், கொல்லர், வலைஞர், வண்ணார் முதலிய தொழி லாளர் பலர்க்கும் வரி விதிக்கப்பட்டது. பல்லவர் ஆட்சிக் காலத்தில், நாட்டின் நிலம் எல்லாம் நன்கு அளக்கப் பெற்று நான்கு எல்லைகளும் தெரிய கல்லும், கள்ளிச் செடியும் நடப்பட்டன; மறையவர்க்காக விடப்பட்ட நிலம், "பிரம்மதேயம் கோவில்களுக்கு விடப் பட்ட நிலம் 'தேவ தானம்': பள்ளிகளுக்கு விடப்பட்ட நிலம் "பள்ளிச் சந்தம்' சரிகளைப் பழுது பார்க்க விடப்பட்ட நிலம் 'ஏரிப்பட்டி வருவாயில் பாதி, நில உடைமையாளர்க்கும், பாதி நிலத்தை உழுவார்க்கும் உரிமை என வரையறுக்கப்பட்ட நிலம் 'பயல் நிலம்” அரசர்க்குரிய வரி செலுத்துவதற்காக விடப்பட்ட நிலம் "அடைநிலம்’ இவ்வாறு நிலங்கள் வகைப்படுத்தப் பட்டன. காடு கொன்று நாடாக்குவார், குளம் தொட்டு வளம் பெருக்குதல் வேண்டும் என்ற அரசியல் உண்மையைக் காடு வெட்டிகளாகிய பல்லவர் உணராதிரார். அதனால், பாசன வசதி தரும் பெரிய பெரிய ஏரிகளை நாடெங்கிலும் அமைத் திருந்தார்கள். 'திரளய தாடகம்' எனும் தென்னேரி, 'சித்திரமேக தாடகம்” எனும் மாமண்டுர் ஏரி பரமேசுவர தாடகம்' எனும் கூரம் ஏரி 'வைரமேக தாடகம்' எனும் உத்திரமேரூர் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, மருதாடு ஏரி என்பன அவற்றுள் சிறப்புடையன. ஏரிகளை அமைத்ததோடு நில்லாமல், அவ்வேரிகளுக்கு ஆற்று நீரைக் கொண்டு சென்று நிரப்பும் கால்வாய்களையும் வெட்டி வைத்தனர். வைரமேகன் வாய்க்கால் க்ாவிரியில் வெட்டப்பட்டது. பெரும்பிடுகு வாய்க்கால், மகேந்திரவாடி வாய்க்கால், கோவிந்தவாடி வாய்க்கால் முதலியன பாலாற்றில் வெட்டப் பட்ட வாய்க்கால்களாகும். - . - பல்லவர் காலத்தில் பரப்பளவு, நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை முதலாம் பல்வேறு