பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காலந்தோறும் தமிழகம் அளவைகளும் சிறந்து விளங்கின; ஒரு கலப்பை கொண்டு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒருவன் உழுது முடிக்கும் நிலத் தின் அளவு "கலப்பை” எனப்பட்டது: ஒருவன் குறிப்பிட்ட ஒர் இடத்திலிருந்து புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றி வந்து புறப்பட்ட இடத்தை அடைய அவனால் வளைக்கப் பட்ட நில அளவு, நிவர்த்தனம்" எனப்பட்டது; ஓர் ஆட்டை குறிப்பிட்ட ஒர் இடத்தில் குறிப்பிட்ட நீளம் உள்ள கயிற்றில் கட்ட அவ்வாடு சுற்றி வரும் நிலப்பகுதி "பட்டிகா அல்லது "பட்டி” எனப்படும். • , - நாலு சாண்கோல், பன்னிரு சாண்கோல், பதினாறு சாண்கோல் என நீட்டல் அளவை பலவகைப்பட்டன. கழஞ்சும், மஞ்சாடியும் பல்வவர்கால நிறுத்தல் அளவை களாம், நாழி, உறி, சோடு, மரக்கால், பதக்கு குறுணி, காடி, கலம் என்பன அக்கால வழக்கிலிருந்த முகத்தல் அளவைகளாம், - பொருள் கொடுத்துப் பொருள் வாங்கும் காலம் கடந்து பொன் கொடுத்துப் பொருள் வாங்கும் காலத்தில் வாழ்ந் தவர் பல்லவர். ஆதலின் அவர்கள் செம்பாலும், வெள்ளி யாலும் பொன்னாலும் செய்யப்பட்ட காசுகளை நாட்டில் நடமாட விட்டிருந்தனர். அக்காசுகளின் ஒரு பக்கத்தில், சில வற்றில் நந்தி இலச்சினையும், சிலவற்றில் பாய்மரக் கப்பல் இலச்சினையும் பொறிக்கப் பெற்றிருக்கும். மறு பக்கத்தில்: சங்கு, சக்கரம். வில், மீன், குடை, கோவில், விளக்கு, குதிரை, சிங்கம், நண்டு, ஆமை போன்றவை பொறிக்கப் பெற்றிருக்கும். - நாடு வளமெல்லாம் பெற்றுத் திகழினும், அந்நாட்டின் நான்கு எல்லைகளும் பகைவர் தாக்குதலுக்கு உள்ளாகி விடின், நாட்டில் அமைதி இராது என்பதை உணர்ந்த பல்லவர்கள் நாடு காக்கும் படைத் துறையிலும் சிறந்தே விளங்கினர். வாதாபியைக் கைப்பற்ற வல்ல தரைப் படை யும், ஈழத்தை வெல்ல வல்ல கடற் படையும் பல்லவரிடத்தே சிறந்து விளங்கின. -