பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ. பல்லவர் காலச் சமயங்லை கடைச்சங்க காலம் வரை சிறப்போடு விளங்கிய வைதீக சம:சங்களாம் சைவ, வைணவ சமயங்கள், கடைச்சங்க காலத்தை அடுத்துத் தமிழகம் புகுந்து ஆளத் தொடங்கிய களப்பிரர்கள் தம்மோடுகோண்டு வந்த பெளத்த, சமண சமயங்களால் அழிக்கப்பட்டு, வலி குன்றி விட்டது. வைதீக சமயங்களாம் சைவ, வைணவ சமயங்களின் வழி காட்டியாக விளங்கியவர்கள், மக்களிடையே பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தும், சமய வழிபாடு உயர்சாதியினர்க்கே உரித்து என்றும், மக்கள் ஒவ்வா வழி களைக் காட்டி வந்தனர். அதனால், அச்சமயங்கள்பால் மக்களின் பற்று குறையலாயிற்று, அதே நேரத்தில் பெளத்த சமண சமயங்களின் தலைவர்கள், மக்களிடையே உயர்வு தாழ்வு கருதாமல், எல்லோரையும் ஒரு சேர மதித்தளர். நாடெங்கிலும் கல்வி நிலையங்களை அமைத்து கல்வி அறிவு புகட்டினர். மக்களுக்கும் விலங்கினங்களுக்கும் மருத்துவ மனைகளை அமைத்தனர். அறச்சாலைகளை அமைத்து உடல் ஊனமுற்றோர்க்கு உணவும், உடையும், உறையுளும் அளித்தனர். இவ்வறச் செயல்களால் ஈர்க்கப்பட்ட முக்கள் சமண, பெளத்த சமயங்களைப் போற்றி ஆதரிக்கத் தலைப் பட்டனர். - இந்நிலை பல்லவர்காலத் தொடக்கத்தில் மாறத் தொடங்கியது. சைவ, வைணவ சமயங்களாகிய வைதீகச் சமயங்களின் காவலர்களாய் வாழ்ந்து வந்த பெரியவர்கள்,