பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காலத்தோறும் தமிழகம் ஏழை எளிய மக்களை ஈர்க்க, சமணர்கள் அறச்சாலைகளை யும், கல்விக் கூடங்களையும் நிறுவியது போலவே, அடியார் கட்கு அன்னம் அளித்தல், வழிப் போவர்க்கு எனத் தண்ணிர்ப் பந்தல் அமைத்தல், மடங்கள் அமைத்துச் சமயக் கல்வியும், சமுதாயக் கல்வியும் வழங்குதல், புதிய கோயில் கள் கட்டுதல், பழைய கோவில்களுக்குத் திருப்பணி செய்தல் போலும், அறப்பணிகளை ஆற்றி வந்தனர். சமயக்கல்வி பெற்ற அறவோர்கள், ஆண்டவன் அருள் பெறச், சமணர்கள் கூறுமாறு, உண்டி சுருக்க வேண்டுவது, உடல் வருத்தக் கடுந்தவம் ஆற்றுவது போல்வண தேவை யில்லை; இறைவன் புகழை, உளத் தூய்மையோடு,வாயாரப் பாடி வழிபட்டால் அதுவே போதும், இறையருளைப் பெற்று விடலாம் என்பன போலும் எளிய நெறிகளைச் சமயநெறிகளாகக் கூறி வந்தமையாலும், நல்லாறு தெரிந் துணர, தம்பன் அருளாமையினால், கொல்லாமை மறைந் துறையும் சமண சமயம் புகுந்தவர்கள், மேல்ல மெல்ல அச் சமயத்தைக் கை விட்டு மீண்டும் சைவர்களாகவும், வைணவர்களாகவும் மீளத் தொடங்கினர். இந்நிலை, பல்லவப் பெருவேந்தன் மகேந்திரவர்மன் காலத்திலேயே உருவாகி விட்டது. பல்லவர், சமண சமயம் பிறந்த வடநாட்டினின்றும் வந்தவராதலாலும், அவர்கள் தமிழகம் புகுந்த காலை, ஆங்கும் சமணமே பெருவர விற்றாய்த் திகழ்ந்தமையாலும், பல்லவர் சமண சமயத் தையே சார்ந்திருந்தார்கள். சைவ-வைணவப் பெரியார் களின் சமயநெறி விளக்கங்களின் பயனாக, நாட்டு மக்கள், சமணத்தை நழுவ விட்டுச் சைவராகவும், வைணவராகவும் மாறியது கண்ட பல்லவக் குடியினரும் தங்கள் சொந்தச் சமயமாம் சமணத்தைக் கைவிட்டு, சைவ-வைணவ சமயங் களைத் தழுவிக் கொண்டனர். - ஆனால், இச்சமய மாற்றத்திற்குச் சமணர்கள் எளிதில் இடம் கொடுத்தார்கள் அல்லர்: சமயம் மாறிய பெரியவர்