பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா, கோவிந்தனார் 81 களும், தொல்லைகளுக்கு ஆளாகாமல் விடப்பட்டார் அல்லர். சைவராகப் பிறந்து, சமண சமயம், புகுந்து, பின்னர், தமக்கையார் திலகவதியார் அருளால் மீண்டும் சைவராகி விட்ட நாவுக்கரசரை, நீற்றரையில் இட்டும், நஞ்சு கலந்த உணவு அளித்தும், கொல்யானைக் காலடியில் இட்டு மிதிக்கச் செய்தும், கடைசியில், கல்லில் கட்டிக் கடலில் பாய்ச்சியும் செய்த கொடுமைகளும், மதுரையில் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீயிட்ட கொடுமை களும், சமணர்களின் ச்ேசெயல்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தனவாம். இத்துணைக் கொடுமைகளையும் அமைதியோடு தாங்கிக் கொண்டு சைவராக மாறிய அச்சமயப் பெரியாரின் பெருமையைக் கண்ட அளவே, பிறவியிலேயே சமணனான மகேந்திரவர்மன் சைவனாக மாறிச் சைவ சமயத்திற்கும் புத்துயிர் ஊட்டினான். சமண சமயச் சார்புடையனாக இருந்தபோது, சமயவெறி காரணமாக, சமணர்கள், நாவுக்கரசர்க்கு இழைத்த கொடுமைக்களுக்கெல்லாம் துணையாக நின்ற அவன், சைவனாகமாறியதும், அதே சமய வெறிகாரணமாக, சமணர்க்கும் கேடு விளைவிக்கத் துணிந்து விட்டான். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணப்பள்ளி களையும், பாழிகளையும், கல்லூரிகளையும் அழித்து அவற்றின், சிதைவுகளிலிருந்து பெற்ற கற்களைக் கொண்டு திருவதிகையில், தன் பெயரில் குணதர ஈச்சுரம் என்ற சிவன் கோயிலைக் கட்டினான். <. இச்சமய மாற்றம் பல்லவ நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில், பாண்டிநாட்டில், திருஞான சம்பந்தர், பாண்டிய மன்னன் நெடுமாறன் நோய் தீர்த்தும் சமணர்களோடு வாதிட்டு வென்றும், சைவம் வளர்க்கும் சமயப் பணியாற்றி வந்தார். * *.