பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காலந்தோறும் தமிழகம் . கொல்லாமை, புலால் உண்ணாமை, பிற உயிர்க்குத் தீங்கு எண்ணாமை போலும் அருள் நெறியினைப் பின்பற்று பவர் எனக் கூறிக் கொள்ளும் சமணர்கள், தங்கள் சமயத்தை அழிக்கத் துணியும் பிற சமயத்தவர்களை நீற்றரையில் இடுதல் போலும் மறச் செயல்களைத் துணிந்து மேற் கொண்டது போலவே, அன்பே சிவம் எனக் கூறிக் கொள்ளும் சைவர்களும். வைணவர்களும் தங்கள் சமய அழிவிற்குக் காரணமாயிருந்த சமணர்களைக் கழுவேற்றல் போலும் வன்செயல்களைத் துணிந்து மேற் கொண்டனர். சைவனாக மாறிய மகேந்திரவர்மன், திருப்பாதிரிப்புலியூர் சமணப் பள்ளியை அழித்துத் திருவதிகையில் சிவன் கோயில் கட்டியது போலவே திருமங்கை ஆழ்வார், நாகப்பட்டி னத்துப் பெளத்த விகாரத்தில் இருந்த, பொன்னால் ஆன புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதை அழித்துக்கொண்ட பொருளால் வைணவக் கோவில்கள் பலவற்றிற்குத் திரும் பணிகள் செய்ததைக் குருபரம்பரை கூறுகிறது. "கோதை வேல் தென்னன் தன் கூடல் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் - காதலால் புண்கெழுவு செம்புனல் ஆறு ஒடப் - பொருதவரை வன்கழுவில் தைத்த மறையோனை' - என்ற நம்பியாண்டார் நம்பி வெண்பாவும், "வெறுப்பொடு சமண முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியண்கள் பேசில் போவதே நோயதாகி குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல், தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா.நகர் - உளானே. என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடலும், சமணர் கழுவேற்றப்பட்ட நிகழ்ச்சிக்குச் சான்று பகர்கின்றன.