பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 83 r பவ்லவ வேந்தர்கள் சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களையும் ஒப்ப மதித்துப் போற்றி வந்துள்ளனர்: மகேந்திரவர்மனும், பரமேசுவர வர்மனும், இராச் சிம்மனும் சைவர்களாகவும், சிம்ம விஷ்ணுவும், நரசிம்ம வர்மனும்: இரண்டாம் நந்திவர்மனும் வைணவர்களாகவும் காணப் படுவது, சமயத்துறையில், பல்லவர் கடைபிடித்த சமரச நிலையினை உறுதி செய்யும். இவ்வாறு, பல்லவர் காலத்தில், சமணம் அழிய, சைவ, வைணவ வைதி சமயங்கள் புத்துயிர் பெறத் தொடங்கிய போது, சைவ்த்தோடு தொடர்புடைய சமயம் என்ற உரிமையோடு, பாசுபத சைவம், காபாவிக சைவம், காளா முக சைல்ம் போலும், சில வடநாட்டுச் சைவநெறிகளும் தமிழகத்துள் நுழைந்து விட்டன. .. தம் இல்லத்தில் விருந்துண்ண வந்த காபாலிகச் சிவனடி யார், உணவாகப் பிள்ளைக்கறி வேண்ட, தம் மகனையே அறுத்துச் சமைத்து விருந்தளித்த சிறுத்தொண்டர், வாதாபி கொண்ட பல்லவர் படைத் தளபதி ஆவர். அவர் பின்பற்றிய சமயம், பைரவர்க்குப் பலியிட்டு வழிபாடு செய்யும் காபாலிகச் சைவ மரபாகும். தமிழகம் தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த அன்பு வழிச் சமய வழிபாட்டின் முன், அருள் தெறியே தம் தெறி எனக் கூறி வந்த சமண சமயமே நிற்கமாட்டாது அழிந்து விட்டது என்றால், உயிர்கொலை விரும்பும் காபாலிகர் சமயம் போன்றன நிலைக்க மாட்டாது மறைத்து போனதில் வியப்பில்லையின்றோ! சமணம் மறைய, நாயன்மார்களும், ஆழ்வார்களும் வழிபட வளர்ந்த வைதீகச் சமயமே பல்லவர் காலச் சமய நிலையாகும்.