பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. பல்லவர்கால இலக்கியம் ஏறத்தாழ அறுநூற்று ஐம்பது ஆண்டு காலம் நின்று நிலவிய பல்லவர் ஆட்சிக் காலத்தின் தொடக்கம் வடமொழி வளர்ச்சிக்கு உரியதாக விளங்கிற்று என்றால், இறுதி, தமிழ் மொழி வளர்ச்சிக்கும் துணை நின்றது எனலாம். பல்லவர் வடநாட்டினின்றும் வந்தவராதலின், அவர் அரசவையில் வடமொழி கொலுவீற்றிருந்தது என்பதில் வியப்பில்லை. பிற்காலப் பல்லவர் மரபின் முதல்வனான சிம்ம விஷ்ணு, சாளுக்கிய நாட்டில் தன் புகழ் பரப்பி, கங்க நாடு வந் திருக்கும் வடமொழிப் புலவராம் பாரவியைத் துரதுவர்; போக்கிப் பல்லவ நாட்டிற்கு வரவேற்றுச் சிறப்பித்தான் எனப், பல்லவர் காலப் பிறிதொரு வடமொழிப் புலவராம் தண்டி என்பார், தம்முடைய அவந்தி சுந்தரி கதையில் கூறி யிருப்பதும், மத்த விலாசப் பிரகசனம் என்ற வடமொழி நூலின் ஆசிரியனாக, மகேந்த்ரவர்மனே விளங்குவதும், பெருவள நல்லூர்ப் போர் பற்றிய விளக்கங்களைக் கூறும் கூரம் பட்டயம், பல்லவர் வரலாறு விளங்கப் பெருத்துணை யாக நிற்கும் காசகுடிப்பட்டயம் போலும் பல்லவர் பட்டயங்கள் எல்லாம் சிறந்த வடமொழிப் புலமை வாய்ந்த வனாகவிளங்குவதும், காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கல்வெட்டுக்கள், இலக்கியச் செறி வோடு கூடிய வடமொழியில் விளங்குவதும், பல்லவர் ஆட்சியில், வடமொழியும், வடமொழிப் புலவர்களும் பெற்றிருந்த சிறப்பிடத்தைப் புலப்படுத்துவனவாம். -