பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 85 கடைச்சங்க காலத்துத் தமிழ், துரய தனித் தமிழ்நடை உடையதாகப், பதினோறாம் நூற்றாண்டில் எழுதப் வெற்ற, பெரிய புராணம், கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி போலும் நூல்களில், வடமொழி பெருவரவிற்றாய் காணப்படுவதற்குக் காரணம், பல்லவர் காலத்தில்: தமிழகத்தில் வடமொழி, .ே கா .ே லா ச் சி க் கொலு வீற்றிருந்ததேயாம். பல்லவர்க்குப் பிற்பட்ட காலத்தே எழுதப் பெற்ற யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி போலும் யாப்பிலக்கண உரையாசிரியர்கள், ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்லும், எண்ணற்ற யாப்பு நூல்கள் அனைத்தும், வட மொழி யாப்பிலக்கண மரபை ஒட்டிய செய்யுள்கள். எழுந்து விட்டகாரணத்தால், பல்லவர் காலத்தில் எழுதப்பட்டனவே ஆம். அவையெல்லாம், வடமொழி மரபுப்படி எழுதப் பட்டனவேனும், தமிழிலேயே எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. - வடமொழி வழங்கும் வடநாட்டிலிருந்து வந்த காரணத் தினால் பல்லவர்கள், வடமொழிக்குச் சிறப்பளித்தனர் என்றாலும், தாம் வந்து வாழும் நாட்டில் வழங்கும் மொழியை வளர்த்தாலல்லது, தாம் வாழ இயலாது என்ப தால், தமிழ் வளர்க்கும் பணியை மெல்ல மெல்ல மேற் கொண்டார்கள். பல்லவவேந்தர்கள் வடமொழி வல்லுநர் கள் என்ற நிலை மாறி, அவர்கள் தமிழ் அறிந்தவர்கள், தமிழ்ப் புலவர்களும் போற்றும் பெரும் புலமை படைத்தவர்கள் என்ற நிலையும் உருவாகி இருந்தது. ஐயடிகள் காடவர்கோன் எனச் சேக்கிழாரால் பெயரிட்டு அழைக்கப்படும் மூன்றாம் சிம்மவர்ம பல்லவன் சிறந்த தமிழ்ப் புலவனாய், "சிவத்தளி வெண்பா' என்ற சிரிய தமிழ் நூலை இயற்றி உள்ளான். தேவாரம் பாடிய மூவருள் முதல்வராகிய தாவுக்கரசர், மகேந்திரவர்மனைச் சமணத்தைக் கைவிட்டுச் சைவம்