பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காலந்தோறும் தமிழகம் தழுவச் செய்தவராவர். அவரும், அவரைத் தொடர்ந்து திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய தேவாரங் களெல்லாம் பல்லவர் காலத்தில் பாடப்பட்டனவே. திருமூலர் திருமந்திரம், காரைக்கால் அம்மையார் பதிகம், நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர்த் தொகை, சேரமான் பெருமாள் பாடிய பொன்வண்ணத்து அந்தாதி, மும்மணிக்கோவை, ஞான உலா, கைலைபாதி காளத்திபாதி, அத்தாதி முதலாம் சைவ சமய வழிபாட்டுப் பாடல்கள். அனைத்தும் பாடப் பெற்றதும் இப்பல்லவர் காலத்தில் தான். சம காலத்தவர்களாகிய பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கை யாழ்லார் நீங்க, எஞ்சிய ஆழ்வார்கள் பாடிய திவ்விய பிரபந்தங்களாகிய வைணவ இலக்கியங்கள் எழுந்ததும் இக்காலத்தில்தான். தேவார-திவ்விய பிரபந்தம் போலும் வழிபாட்டுப் பாடல்களே அல்லாமல், சிறந்த இலக்கியங்களும் பல்லவர் காலத்தில் எழுந்தன. அவற்றுள் தலையாய சிறப்புடையன. தந்திக் கலம்பகமும், பாரத வெண்பாவும் ஆம். நந்திக் கலம்பகம், மூன்றாம் நந்திவர்மன் புகழ் பாடுவது: கலம் பகங்களுள் முதலாயது; தலையாயது. 'வானுறு மதியை அடைந்தது உன் 'வதனம்; வையகம் அடைந்தது உன் கீர்த்தி; காணுறு புலியை அடைந்தது உன் வீரம்; கற்பகம் அடைந்தது உன் கரங்கள்: தேனுறு மலரான் அரியிடம் சேர்ந்தாள்; செந்தழல் புகுந்தது உன் மேனி; யானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்! எந்தையே! நந்தி நாயகனே!” அக் கலம்பகத்தின் இறுதியில் காணப்படும் கையறுநில்ைச் செய்யுள் இது. வெண்பா, அகவல், விருத்தம் என்ற மூவகைப்பாக் களால், இடையிடை உரைநடை இடம் பெற. உரை ந ை!