பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 87 இட்டபாட்டுடைச் செய்யுாைகப், பாரதம் பாடிய பெருந் தேவனாரால் பாடப்பெற்றது. இது, மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பாடப்பெற்றது. தெள்ளாற்று வெற்றியைப் யாராட்டுவது. 'வண்மையால் கல்வியால், மாயலத்தால் ஆள்வினையால் உண்மையால் பாராள் உரிமையாள்-திண்மையால் தேர்வேந்தர்வான்ஏறத் தெள்ளாற்றில் வென்றானோடு யார் வேந்தார் ஏற்பார் எதிர்' «j-r அவர் பாக்களுள் ஒன்று இது : கடைச் சங்க காலத்திற்குப் பிறகு, தமிழகத்துள் களப் பிரர் நுழைவால், சங்கமும் அழிந்து, சங்கப் புலவர்கள் ஆக்கிய பாக்களும் சிதறிவிட்டுப் போய்விடவே, அஃது அறிந்து, அப்பாக்களை எல்லாம் அரிதின் திரட்டி, அப்பாக்கள் கூறும் பொருள் கருதி, நற்றிணை, குறுந் தொகை ஐங்குறு நூறு என்றும், பாவினம் கருதி பரிபாடல், கலி என்றும், பெரிய பாடல்களின் எண்ணிக்கை கொண்டு பத்துப்பாட்டு என்றும், வகுத்துத் தொகுத்தவரும் இவரே இவ்வாறு வடமொழி, தென்மொழிகளாகிய இரு தொன் மொழிகளின் வளர்ச்சிக்கும் தொண்டு புரிந்த பெருமை, தொண்டை நாடாண்ட பல்லவர்க்கு உரித்து.