பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ. பல்லவர் காலத்தில் ஒவியமும் சிற்பமும் நாகரிக வாழ்க்கையின் நற்சான்றுகளாய நுண்கலை வகையினவாகிய ஓவியமும் சிற்பமும் பல்லவர் காலத்தில் மிகச் சிறந்த இடம் பெற்று மிளிர்ந்தன. பல்லவர் கால ஒவிய வளத்தினை, உலகு பாராட்ட உறுதுணையாக நிற்பது சித்தன்ன வாசல், - புதுக்கோட்டை மாவட்டத்தில், நாரத்தா மலைப் புகை வண்டி நிலையத்திற்கு அணித்தாக உள்ள சித்தன்ன வாசல் குன்றின் மீது வெட்டப்பட்ட குகைக்கோயிலின் தூண் களிலும், மேற்கூரைகளிலும் வரையப்பட்டிருக்கும் வண்ண ஒவியங்கள், காண்பார் கண்களுக்குப் பெருவிருந்தாம். முன் மண்டபத் துரண்கள் இரண்டிலும் வரையப்பட்டிருக்கும் நடனமாதர் ஓவியங்கள், அக்காலை, மாதர்கள் அணியும் ஆடை அணிகள், அவர் தம் கூந்தல் ஒப்பனை ஆகியவற்றை அழகுறப் படம் எடுத்துக் காட்டுவனவாய் உள்ளன; வலப் புறத்துண்ணின் உட்புறத்தில் தீட்டப்பட்டிருக்கும் அரசன் அரசியர் ஒவியம், அக்கால அரசர் தம் மணிமுடி அழகு, ஆடவர். மகளிர் தம் தோற்றப் பொலிவுகளைப் புலப் படுத்துகிறது. முன் மண்டபக் கூரையில் தீட்டப்பட்டிருக்கும் தாமரைக் குளம், சித்தன்னவாசல் ஒவியங்களுக்கெல்லாம் முத்தாப்பு வைத்தது போன்றதாகும்; பச்சிலைகளுக்கிடையே மலர்ந்: