பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 89. திருக்கும் செந்தாமரை மலர்கள், அவற்றின் இடைஇடையே காட்சி அளிக்கும் கயல்மீன்கள், கவின்மிகு அன்னங்கள், நீரில் நீந்தி மகிழும் யானைகள், எருமைகள், இடக்கையில் பூக்கூடை தாங்கி வலக்கையால் மலர் பறிக்கும் சமணத் துறவி, ஆகிய இக்காட்சிகளை இயற்கை எழில் சொட்டச் சொட்டத் தீட்டப் பட்டிருக்கும் அழகே அழகு. அதுபோலவே, உள்ளறையின் மேற்கூரையில், ஸ்வஸ்திக், சூலம், வட்டம், தாமரை முதலாம் ஒவியங்கள் இடம் பெற வரையப் பெற்றிருக்கும் வண்ணக்கோலத்தின் வனப்பு, வார்த்தைகளால் விளக்கக் கூடியத்ன்று. சுவர்களில் சுண்ணச் சாந்து பூசி, மஞ்சட் கிழங்கு, மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு, நீலம், பச்சை ஆகிய திறம் தரும் பச்சிலைகள் ஆகிய வற்றைப் பயன்படுத்தி, அன்று தீட்டிய அவ்வண்ண ஒவியங்கள், இன்றும் தம் மெருகு கெடாமல் காட்சி அளிப்பது, அக்கால மக்களின் ஓவியப் புலமையை உலகுக்குப் பறைசாற்றி நிற்கிறது. தாம் விரும்பும் எழில் மல்கும் இயற்கைக் காட்சி களையும், ஏற்றமிகு மக்கள் உருவ நலங்களையும், இவ்வாறு சுவர்களில் ஒவியங்களாகத் தீட்டி மகிழ்ந்த மக்கள், அவ்வண்ண ஒவியங்கள், காலம் செல்லச் செல்ல மங்கி மறைந்து போகவும் கூடும் என்ற அச்சத்தால் அவற்றைப் பாறைகளிலும், பெருங்கோயில்களிலும் சிற்பங் களாகச் செதுக்கியும் விட்டுச் சென்றுள்ளனர். - திருச்சி மலைக் கோவிலில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் கவின் உடையவாகும். சடை முடியிலிருந்து விழும் கங்கையை 'வலக்கையில் தாங்கி, மார்பில் மாலையாக அணிந்த அரவின் தலையைப் பிறிதொரு வலக்கையில் இறுகப் பற்றி கண்மணி மாலையை ஒரு இடக்கையில் தாங்கி, மற்றொரு இடக்கையை இடுப்பில் ஊன்றி நிற்கும் கங்காதரன், அவனை கா தமி-6