பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காலந்தோறும் தமிழகம் வணங்கி நிற்கும் அடியார்கள், தலைக்கு மேலே, வானில் மிதக்கும் யாழோர்-ஆகிய காட்சிகளைக் காட்ட அழகுறச் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களின் சிற்றுளி வேலைப் பாட்டைக் கண்டு வியக்காதவரே இல்லை எனலாம். சிற்பக் கலைக்கு உயிர் ஊட்டியவன் மாமல்லன் நரசிம்மவர்மன். வாதாபி வென்ற நரசிம்மவர்மன், அவ்வாதாபி குகைக் கோயில் சுவர்களில் சாளுக்கியர்தம் கைவண்ணம் கண்டு, அவற்றை அவ்வாறே மாமல்லபுரத்துக் குகைக் கோயில்களில் செதுக்கி வைத்தான். மகிடாசுர மண்டபத்தில், துர்க்கை, சிங்கத்தின் மீது அமர்ந்து, எருமைத் தலை அரக்கன் மீது அம்புகளைப் பொழிய, அவரவர்க்குரிய இரு படைகளும் அவரவர்களைச் சுற்றி நின்று அவர்களுக்கு அரண் செய்ய அமைந்த சிற்பங்களின் சிறப்பு பல்லவர்க்கே உரியது இக்கர்ட்சியினும், மாமல்ல புரத்துக்கு மாண்பு தருவது, கற்பாறைகள் மீது செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களே. கோவர்த்தன மலையைத் தாங்கிக் கண்ணன் நிற்க அவன் அருகே பலராமனும் பிறரும் குழுமி நிற்க, அவர்களுக் கிடையே, கன்றை அன்பொழுக நக்கும் பசுவின் மடியில் கைவைத்துப் பால் கறக்கும் இடையர்களின் நடைபெறும் இனிய காட்சியையும், மலையிலிருந்து பாய்ந்து விழும் ஆறு, அதன் நடுவில் மகிழ்ந்து விளையாடும் நாகர், நீர் நிறைந்த குடத்தைத் தோள் மீது சுமந்து செல்லும் ஓர் அந்தணன், ஆற்று நீர் உண்ணவரும் ஒரு மடமான் ஆற்று நீரில் பாய்ந்து நீராட நிற்கும் அன்னப் பறவைகள், ஆற்றங் கரையில் ஒர் அழகிய கோவில், அதைச் சுற்றிலும் தவ நிலையில் நிற்கும் முனிவர்கள், அம் முனிவர்களைப் பார்த்துத் தானும் தவம் புரியும் பூனை, பூனை தவம் மேற் கொண்டதால், அச்சம் அற்று ஆடி மகிழும் எலிகள் ஆகிய இவையனத்தையும் கொண்ட, அர்ச்சுனன் தவம் என