பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 91 அழைக்கப் பெறும் அழகிய தவக் காட்சியையும் செதுக்கி வைத்திருக்கும் சிற்பநலம் கண்டு சிந்தை மகிழாதவரும் உளரோ? r - இராசசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பங்களைக் குறிப்பிடாமல் விடுவது முறையாகாது. இறைவன் ஆடிய ஊர்த்துவ நடனம், யானைக் கை நடனம் முதல், அக்கால மக்களிடையே பெருவழக்காயிருந்த பல்வேறு நடன வகைகளும் அழகிய சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. அம்மை அப்பர் சிற்பங்களும், அவர்களைச் சுற்றி நின்று. வழிபடும் நான்முகன்-நாமகள், திருமால்திருமகள் சிற்பங்களும் காணத்தத்கனவாம். சுருங்கக் கூறின், கயிலாச நாதர் கோவில், பல்லவர் போற்றிய சிற்பக் கலையை, உலகிற்கு உணர்த்த எழுந்த சிற்பக் கலைக் கூடம் என்றே கொள்ளலாம்.