பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ. பல்லவர் காலத்தில் இசையும் நடனமும் நாகரிக வாழ்க்கையின் நல்ல எடுத்துக்காட்டாய் விளங்குவனவற்றுள் இசையும் நடனமும் முதலிடம் பெறு வனவாம். சங்க காலத் தமிழர் வாழ்க்கையில் அவை சிறப் பிடம் பெற்றுத் திகழ்ந்தன என்பது சங்கி இலக்கியங்களால் இனிது உணரப்படும். சங்க காலத்தை அடுத்து ஏறத்தாழ அறுநூற்றைம்பது ஆண்டுகள், தமிழகத்தில் பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் பல்லவர்கள். அவர்கள் காலத்தில் இசை யும் நடனமும் மேலும் சிறப்புற்றன. அரசன் எவ்வழி, அவ்வழி குடிகள். மன்னனின் சொன்ன வாறே சொல்வது வழக்காறு அன்றோ! இது உலகியல். பல்லவர் காலத்தில் இசையும் நடனமும் தமிழகத்து மக்க ளிடையே, பிரிக்க இயலாப் பெருநிலை பெற்றிருந்தன என்றால், அது அக்கால அரசாண்ட பல்லவவேந்தர்களும் அக்கலைகளில் வல்லவர்களாய், அவற்றைப் பேணி வளர்ப் பவர்களாய்த் திகழ்ந்ததின் விளைவே ஆகும். மகேந்திரவர்மன் சிறந்த இசைப்பேரறிஞனாக விளங்கி னான். 'சங்கீரணம்” என்ற தாள வகையை அதன் ஒழுங்கு களை அமைத்ததனால், அவன் 'சங்கீரணசாதி என அழைக்கப்பட்டான் எனக் கூறுகிறது பல்லாவரம் குகைக் கோயில் கல்வெட்டு, "சித்தம் நமசிவாய' என்று தொடங் கும் குடுமியாம்லைக் கல்வெட்டு “மகேந்திரன் வகுத்த பண்கள் எட்டு:நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்