பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 93 துடும்; ஏழு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன் படும்' எனக் கூறுகிறது. . மகேந்திரன் வெட்டிய மாமண்டூர்க் கல்வெட்டு, இசைச் இறப்பை, “ஊர்வசி கந்தர்வ சாத்திரம்’ எனும் பெயர் சூட்டிப் பாராட்டுகிறது. மகேந்திரன், தான் இயற்றிய மத்த விலாசப்பிரகசனத்தில், "இசை எனது செல்வம்' என வாயாரப் பாராட்டியுள்ளான். 'பொன் நரம்புகள் கொண்ட பரிவாதினி” என்ற வீணையை, வீணை வல்ல நங்கையர் ஒரு பெண் தன் ஆருயிர்த் தோழியை அனைத்துக் கொண்டு படுப்பது போல், அனைத்துக் கொள்வர்” எனப் புத்த சரித்திரத்தில் புகழப்படும் "பரிவாதினி” வீணையில், மகேந்திரவர்மன் வல்லவன். - இராசசிம்மன் விருதுப் பெயர்களாக, இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவன் எனும் பொருள்படும் "வாத்ய வித்யாதரன்’’; ஆதோத்யம் என்ற வீணை வாசிப்பதில் தும்புருக்கு நிகரானவன் எனும் பொருள்படும் "ஆதோத்ய தும்புரு" வீணையில் நாரதருக்கு நிகரானவன் எனும் பொருள்படும் "வீணா நாரதன்' என்பன காணப்படு வதால் இவனுடைய இசை உள்ளமும் புலனாதல் அறிக. நாடாளும் அரசர்கள், இவ்வாறு இசை ஆர்வம் உடைய வர்களாய் விளங்கவே, நாட்டு மக்களும் இசை வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தனர். பல்லவர் காலத்து நாயன்மார்கள் மூவரும், பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய வழிபாட்டுப் பாடல்களை, ஏழிசைச் சிறப்பு விளங்க ஆக்கி அருளினார்கள், ஈசன் எந்தை இணையடி நீழல், மாசில் வீணை போன்றது என, இசை இன்பம், இறை இன்பத்திற்கு நிகரானது எனக் கொண்டர்ர்கள். - சம்பந்தர் பாடிய பாக்களைத் திருநீலகண்ட யாழ்ப் பாணர், தம் யாழில் இசைந்து மகிழ்ந்த வரலாறும், அவர் யாழிலும் இசைத்துப் பாடமாட்டா நுண்ணிய இசை அமைந்த "யாழ்.மூரிப்பண்" பாடுவதில் சம்பந்தர் சிறந்து