பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 காலந்தோறும் தமிழகம் விளங்கிய வரலாறும், பல்லவர்கால இசை வளத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம்! ஆடலும், பாடலும், பிரிக்க இயலாவாறு இரண்டறக் கலந்த கலைகளாதலின், இசைக்கு அளித்த சிறப்பிடத்தில் சிறிதும் குறையாத சிறப்பினை நடனத்திற்கும் அளித்துப் போற்றினார்கள் பல்லவர்கள். மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்ன வாசல் ஒவியங்களில் நாதாந்த நடன நிலையிலும், லதாவிரிசிக நடன நிலையிலும், தீட்டப் பெற்றிருக்கும் இரு நடனமாதர்களின் ஒவியங்களும், காஞ்சி வைகுந்தப் பெருமாள்கோவிலில் உள்ள சிற்பங்களில், ஆடவன் ஒருவன், தன்னை அழகாக அணிசெய்து கொண்டு, அழகிய இரு நங்கையர் இடைநின்று நடம் புரிவதாகவும், நடிகன் ஒருவன் இசை முழங்கியவாறே முன்னே செல்ல, அவனைத் தொடர்ந்து, ஆடவர் அறுவரும், பெண்டிர் இருவருமாகிய நடிகர் எண்மர் செல்ல, அந்நடிகர் குழாம் அரசவை புகுவ தாகவும் செதுக்கப்பட்ட சிற்பங்களும், பல்லவர் காலத்து நடனக்கலைச் சிறப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாம். பல்லவர் காலத்துக் கோவில்களில், நடனம் ஆடுவதற் கென்றே அழகிய மங்கையர். பலர் இருந்தனர்; இறைவன் ஆடிய தாண்டவ நடனம், நாதாந்த நடனம், முதலாம் நடனங்களை ஆடிக் காட்டி, அக்கால மக்களிடையே சமய உணர்வை ஊட்ட உறுதுணையாக நின்ற அம்மடவார்களை நாயன்மார்களும் பாராட்டி உள்ளார்கள். 'வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, மழை 3 என்று அஞ்சிச் சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவை யாறே” இறைவன் ஆடிய பல்வேறு நடனங்களையும், காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிற்பங்களாக வடித்துப், பல்லவர் காலத்து நடனக் கலைக்கு அழியா நினைவுச் சின்னம் அமைத்து விட்டார்கள் பல்லவப் பேரரசர்கள்.