பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காலந்தோறும் தமிழகம் 'வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணா.அது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்". பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ். செழியனைப் பாடிய புலவர் மாங்குடி மருதனாரும், தம் முடைய மதுரைக் காஞ்சியில் அவ்விரு எல்லைகளையே கூறி யுள்ளார். - "தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை” இமயம் முதல் குமரி வரைப் பரவிய பெருநாடாய்த் திகழ்ந்த தமிழகம், வேங்கடம் முதல் குமரி வரைக் குறுகிய சிறு நாடாகச் சிதைந்துவிட்ட சங்ககாலத்திலும், தன் பண்டைய பேரெல்லையை அது ஒரோ வழி அடையப் பேரரசு செலுத்திய அரசர்களும் இருந்தனர். தம்மைப் பெற்றெடுத்த பெருமைக்கு உரியோனாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைத் தாம் பாடிய சிவப்பதிகாரத்தில் பாராட்டப்புகுந்த இளங்கோவடிகளார், 'குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதன்' எனப்பாராட்டி சேரர்குலத்து வந்தான் ஒருவன் இமயம் வரை ஆண்ட சிறப்பிற்குச் சான்று பகர்ந்துள்ளார். 'மூவேந்தர்களையும் ஒருசேர மதிக்கும் மாண்புடைமை யால் மூவர் வரலாறு விளங்கும் சிலம்பினைப் பாடும் உரிமை தங்களுக்கே உரித்தாகுக” என்ற சாத்தனார் சொல்லுக்குச் தான்று பகர்வார்போல் மூவேந்தர் வரலாறுகளையும் முறை கெடாவாறு பொழிந்தருளிய இளங்கோவடிகளார், "திங்கள் மாலை வெண்குடையான் சென்னி, செங்கோல் அது வோச்சிக், - கங்கைதனைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி . - - az fr(36\tff;*** என்ற தொடரில், சோழர் குலத்து வந்தானொருவன் இமயம் வென்ற சிறப்பினைப் பாராட்டியுள்னார். w