பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 99. பாண்டியர் குலத்து வந்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இமயப்பெருமலை வரையும் ஆணை செலுத் தினான் என்பது முன்னர்க் காட்டிய காரிகிழார் செய்யுளால் காணக்கிடப்பதாகும்." பண்டைய தமிழகம், பரந்து அகன்ற இப்பேரெல்லைப் பெருமை ஒன்று மட்டுமே உடையதன்று, "உலகப் பெருநாடு களுள் அறிவாற்றல்களிலும், செல்வச் செழுமையிலும் நாகரிக நல்வாழ்விலும் நனி சிறந்து விளங்கும் நாடு எங்கள் நாடே' என்று இன்று இறுமாந்து கூறும் இன்றைய நாடுக ளெல்லாம், உலக மக்களின் உணர்வுள்ளும் இடம்பெறலாகா அத்துணை இருள் செறிந்த இருண்ட நாடுகளாய் மறைந்து கிடந்த அத்துனைப் பழங்காலத்திலேயே, உலக மக்களுக்கு உணவும் உணர்வும் ஒருங்கே ஊட்டவல்ல ஒப்புயர்வற்ற நாடாய் நின்று புகழ்பெற்றிருந்தது நம் தமிழகம். வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட அப்பெரு நிலப் பரப்பினைச் சங்ககாலப் புலவர் பலரும், 'வையக வரைப்பில் தமிழகம், 'இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்', 'சம்புத் தீவினுள் தமிழகம்” எனத் 'தமிழகம்’ என்ற பெயரினாலேயே அழைத்துள்ளனர் என்றர்லும். ஆசிரியர் தொல்காப்பியனார், அதை, மூவேந்தர்க்குரிய முதுபெரும் நாடாகவே மதித்துள்ளார். அவர் தமிழகத்தை 4 வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்றே வழங்குவது காண்க. சேர சோழ பாண்டியர்களாகிய அம்மூவேந்தர் ஆட்சி, வரலாற்றுக் காலத்துக்கு அப்பாற்பட்ட முதுபெரும் பழமை யும் பெருமையும் உடையதாகும். இவ்வரசுகளைத் தோற்று வித்தவர் இன்னார், தோற்றுவித்த காலம் இது என வரை யறுத்துக் கூறிய வரலாற்று ஆசிரியர் ஒருவரும் இலர். இவ்வரசுகளின் பழமை பற்றிக் கூற வந்த ஆசிரியர் ஒருவர், "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி' என்று கூறுவதோடு நின்று விட்டார். பிறிதோராசியர், சேர சோழ பாண்டியர் குடிகள் போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிகள்" என்று கூறி முடித்தார். - - வடமொழி இராமாயண ஆசிரியர் வான்மீகியாராலும், அவ்வடமொழிக்கு முதல் இலக்கணம் வகுத்த பேராசிரியர்