பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காலந்தோறும் தமிழகம் காத்தியாயனராலும் பெருமைக்கு உரியவராகப் பாராட்டப் பெற்ற பழமை வன்ய்ந்தன. இப்பேரரசுகள் மூன்றும். மேற்கே சிறந்து விளங்கிய முதுபெரும் அரசாகிய உரோமானியப் பேரரசும், கிழக்கே சிறந்து விளங்கிய சீனப் பேரரசும் கண்டு அஞ்சத்தக்க அளவு, அந்நாடுகளோடு கடல் வாணிகம் புரிந்த பழமையும் பெருமையும் அம்மூவேந்தர் ஆட்சிக்கே உரியவாம். - இமயம் முதல் குமரி வரைப் பரவியுள்ள இந்தியப் பெரு நிலப் பரப்பில் நனிமிகப் பழங்காலத்தே தோன்றி நாடாண்ட அரசுகள் பலவற்றுள்ளும், வேங்கடம் குமரிகட்கு இடைப்பட்ட தென்னாடாண்ட தமிழரசுகளே தன்னே ரில்லாச் சிறப்புடையவாம் என்பது :ரலாற்று ஆசிரியர் அனைவர்க்கும் ஒத்த ஒருமைப்பாடுடைய உண்மையாகும், தென்முனை தமிழகம் நீங்கிய இந்தியாவிலும், இந்தியா விற்கு அப்பாற்பட்டும் தன் ஒரு குடையே நிழல் செய்ய உலகாண்ட உரவோனாகிய மவுரியர் பெருமரபில் வந்த மன்னர் மன்னன் அசோகனால், 'தன்னோடு ஒத்த பெருமைக்கு உரியவர் தமிழாசர்; அவர் ஆட்சிக்கு உட்பட்ட அரசு, தன் ஆட்சிக்கு அடி பணியாது தனித்து நின்று ஆள் வல்ல பேரரசாம்" எனப் பாராட்டப் பெற்ற பழமையும் பெருமையும் உடையன நம் பண்டைத் தமிழரசுகள் மூன்றும், - சான்றெண் விளக்கம் தொல் காப்பியம் : பாயிரம் புறநானூறு. பா.6. மதுரைக் காஞ்சி-வரிகள் 70-71 சிலப்பதிகாரம் : உரைப்பாட்டு மை சிலப்பதிகாரம் : 7:2 - புறநானூறு. பா. 6. புறநானூறு, பா. 168. சிலப்பதிகாரம் : 3:37 மணிமேகலை ; 17:62 தொல்காப்பியம் : பொருள் பா :79 புறப்பொருள் வெண்பா மாலை-14 திருக்குறள் : பரி ; உரை Edicts of Asoka.