பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காலந்தோறும் பெண் பார்த்தால், தாயின் முதன்மையும், தாய்வழிபாடும் முதன்மை பெற்றிருந்தது என்பதை முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். @##9uurroflsio gruri o rfsolo (Mother right in India) orsörp நூலில், மானிட இயல் வரலாற்றறிஞர் (O. R. Ehrenfels) எஹரன் ஃபெல்ஸ், இந்தியாவில் தாய்வழி சம்பிரதாயத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த கேரள நாயர் இனத்தாரை, அந்த எலிந்து வெளி நாகரீக இனத்தாருடன் தொடர்புடையவர் களெனச் சான்றுகள் கொடுக்கிறார். அது மட்டுமின்றி, இன்றளவும், நம்மில் பல பிரிவினர்க்கும், தாய் வீட்டில் திருமணம், பிள்ளைப்பேறு, மற்றும் எல்லாச் சடங்குகளுக்கும் தாய் மாமனே முக்கியத்துவம் பெறுதல் ஆகிய எல்லா வழக்கங்களும், அந்தத் தாய் வழிச் சம்பிரதாயம் தேய்ந்து வந்ததன் சிதைவுகள்தாமென்று கருதவும் இடமிருக்கிற தென்பதை வலியுறுத்துகிறார். ஏனைய எல்லா இடங்களிலும், இஸ்லாமியப் பெண்கள் பர்தாவுக்குள் முடக்கப்பட்டாலும் கேரளத்தில் வரவில்லை. தாய்வழிச் சம்பிரதாய நாயர்குல மகளிர், சுதந்திரமுடையவர் களாக, பொது வாழ்வில் ஈடுபடக்கூடிய துணிவு பெற்ற வர்களாக விளங்குவதைக் காண்கிறோம். இந்தத் தாய்வழிச் சம்பிரதாயம், பெண்ணைக் கற்புக் கூட்டுக்குள் முடக்கவில்லை. அவளைப் புருஷன் வீட்டுக்கு ஊழியம் செய்ய வழி கோலவில்லை. கணவன் இவளுடன் தொடர்பு கொள்ள வருவான். இந்தத் தாயுரிமை மாற்றி, தந்தை வழி நாகரீகம் கேரளத்தில் வடக்கிலிருந்து வந்த நம்பூதிரி இனத்தாரால் வந்தது. நாயர் இனத்தில், மகளிர் வயது வந்து அறிவும், தேர்ச்சியும் பெற்றபின், தனக்குரிய மணவாளனைத் தேர்ந்து, மக்களைப் பெறும் சுதந்தரத்தையும் கட்டுப்படுத்தி விட முடியவில்லை. எனினும், சம்பிரதாயமாக பெண்