பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 107 இதே கண்ணோட்டத்தில், மனுவும் கைம்பெண்கள் இறந்த கணவனின் சொத்துரிமையைப் பெற, அதே கோத்திரத்தில் உதித்த ஒருவனுடன் கூடி (மறுமணம் கொண்டு) மகனைப் பெறலாம் என்று அனுமதிக்கிறார். ஆனால் அடுத்த சில பாடல்களில் இவ்வாறு மக்களைப் பெறுவதற்கு ஒன்று அல்லது இரண்டு என்று உச்சவரம்பு காணப்படுகிறது. தொடர்ந்து, இதே மனுவின் பெயரால் அறியப்படும் நெறி முறைகள், முற்றிலும் மாறான கருத்துடன் வருகின்றன. கணவனை இழந்தபின் மறுமணம் செய்துகொள்வதனால், தரும நெறிகளை மீறி பாவத்துக்குட்படுறாள். அவள் தன்னை ஒடுக்கி போகங்களைத் துறந்து, கனிகளை மட்டுமே உண்டு, இன்னொரு ஆணின் பெயரைக்கூட மனதில் எண்ணாத வளாகத் தவ வாழ்வு வாழ்ந்து முடிய வேண்டும். 'மனுஸம்ஹிதை குறித்து எழுதும் சிறந்த ஆராய்ச்சி அறிஞரான திருமதி சகுந்தலாராவ் சாஸ்திரி மனுஸம்ஹிதை' என்ற தொகுப்பு, ஆதியில் தோன்றிய தர்ம சூத்திரங்கள் சட்ட நெறிகளுக்கும் இடையே பாலமாக மனு என்ற ஆசிரியரின் பெயரில் பலரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தொகுப்பு எனலாம் என்று கருத்துரைக்கிறார். ஏனெனில் பெண்ணின் உரிமைகள், திருமணம் என்ற மிக முக்கியமான சமூக வழக்கங்களைச் சார்ந்து பெண்ணின் மதிப்பை வலியுறுத்தும் பல சட்ட நெறிகளுக்கும் மனு என்ற பெயருடைய ஆசிரியர் பொறுப்பானவராகக் கருதப்படுகிறார். எனவே இவர் பெயரிலேயே, முன்னுக்குப் பின் முரணான சட்டநெறிகள் வலியுறுத்தப்படுகின்றன. கைம்பெண்கள் மணம் புரிந்துகொண்டு சொத்துரிமை யைப் பெறவும், நீர்க்கடனுக்கு உரிய மகனின் தாய் என்ற மதிப்பைப் பெறவும் அனுமதி இருந்ததனால்தான் இன்றளவும் வசைச் சொல்லாக வழங்கப் பெறும் "கைம் பெண் மகன்’ என்ற தொடரே வழக்கு மொழியில் தோன்றியிருக்க வேண்டும்