பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 காலந்தோறும் பெண் நமது தொலைக்காட்சி சித்தரிப்புக்குப் பிராயச் சித்தமாகவும் இது அமைந்திருந்தது. இந்தப் படத்தில், சங்கரரின் அன்னை-இளமையும் எளிமையும், எழிலுமாகக் காட்சியளித்தார். ஆரோக்கியமும் சுதந்திரமான வனப்பும் உடைய நாயர் இனப் பெண்ணின் பிரதிநிதியாகவே தோற்றம் தந்தார். நம்பூதிரி பிராம்மணர் இடையே மூத்த மகன் மட்டுமே தம் இனத்துப் பெண்ணை முறையாக மணந்துகொள்ளும் வழக்கம் உண்டு. ஏனைய சகோதரர்கள் நாயர் இனப் பெண்களுடன் 'சம்பந்தம்’ வைத்துக் கொள்வார்கள், அவ்வளவே; நாயர் இனப் பெண்கள், கணவன் வீடு வரமாட்டார்கள். இது குறித்து ஏற்கனவே, சில சான்றுகளை இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். மருமக்கத்தாயம்’ என்ற தாய்வழிச் சம்பிரதாயத்தில் சுதந்திரமாக விளங்கிய பெண்களை, தந்தைவழிச் சம்பிரதாய முதன்மையில் வளைக்க, வடக்கிருந்து நம்பூதிரி இனத்தார் வந்தனர் என்று இந்தியாவில் தாயர் உரிமை என்ற நூலில் எஹ்ரென் ஃபெல்ஸ் என்ற மானிட இயல் அறிஞர் குறிப்பிடுகிறார். ஆதிசங்கரரின் காலத்தில் சமுதாய நிலைமை, நம்பூதிரி-நாயர் இனப்பெண் தொடர்புகள் முழுதுமான தந்தைவழிச் சம்பிரதாயங்களில் நிலைப்பட்டிருக்காது எனக் கருதவே இடமிருக்கிறது. ஆதிசங்கரரின் இளமைப் பருவம் குறித்து தெளிவான வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கவில்லை. சங்கரரின் இளம் பருவத்திலேயே தந்தை இறந்தார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும், தந்தை இவர் பிறக்குமுன்பே இறந்து போனார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும் வழக்கில் இருக்கின்றன. ஏனைய நம்பூதிரி சமூகத்தினருடன் ஒட்டாமல் தனித்தே ஆர்யாம்பாள் வாழ்ந்ததாகவும் வரலாற்றிழைகள் கிடைக்கின்றன. எனவே தாய் தம் மகன் துறவறம் மேற் கொள்வதாகச் சொல்லும்போது, எஞ்சிய காலத்