பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காலந்தோறும் பெண் படுக்கையில் இருக்கிறாள். மனைக்கலில் (நம்பூதிரியின் இல்லம்) எசமானரிடம் இச்செய்தியைத் தெரிவிக்க ஒருமுறை தான் அந்தப் பெரிய இல்லத்தில் வாழும் உரிமை பெற்றிருந்தவள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள, ஆதங்கத்துடன் புலைக்குடிமகனிடம் வேண்டுகிறாள். அந்தச் சிறு குடிமகனாலும் மனைக்கலின் அரண் கடந்து உள்ளே செல்ல முடியாது. எனினும் அந்தத் தாயின் ஆசையை நிறைவேற்றப் பெருமுயற்சி செய்கிறான், முடியவில்லை. கதையின் சாராம்சம் இதுவே. அவள் அந்த இல்லத் துக்குரியவளாக இருந்து, கற்பொழுக்கம், ஐயத்துக்கு இடமானதாகக் கற்பிக்கப்பட்டு, பிரஷ்டம் செய்யப்பட்டவள். எனவே, தாய் ஆரியாம்பாளின் நிலைபற்றிய ஊகங்கள் எங்கெங்கோ கொண்டு செல்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: கணவனை இழந்தவள் என்று அவளை அலங் கோலப்படுத்தும் கொடுமை, அவர்களிடையே நிச்சயமாக இல்லை. இந்து மரபில், வாழ்க்கையின் முதல் படியிலேயே துறவு நெறி முதன்மைப்பட்டிருக்கவில்லை. சமண, புத்த சமயங்களில்தாம் துறவுநெறி கோலோச்சி இருந்தது. சங்கரர், இளவயதிலேயே துறவு நெறி மேற்கொண்டு, சமயத்துக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் மடங்களை நிறுவியதற்கும்கூட, அதுவே காரணம் என்றால் தவறில்லை. ஏனைய சமயங்களின் செல்வாக்கைக் குறைத்து, மக்களை இந்துச் சமயத்தின்பால் ஈர்ப்பதற்காகவும் துறவு நெறி பூண்டு நாடெங்கும் தமது அத்துவைத சித்தாந்தத்தைப் பரப்பினார் எனலாம். i ஆதிசங்கரரின் வரலாற்றில், அக்கால மகளிர் நிலை பற்றிய அற்புதமான உண்மைகள் தெரிய வருகின்றன. அவர் வாதிட வந்த மண்டனமிசிரரின் மனைவி சரஸவாணி, கல்வியறிவும், ஞானமும் ஒருங்கே அமைந்த பெண்மணியாகத் திகழ்கிறார். தம் கணவருடன் வாதிட வந்த சங்கரரை