பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ண்ன் 119 கண்ணால் கண்டு உணருகிறான். அப்படி ஏற்படக்கூடிய பேரிழப்பு எது? “குல நாசம்” என்று இங்கு அறிவுறுத்தப் படுகிறது. பேராசையால் கவரப்பட்டு திருதராஷ்டிரனின் மக்கள் குலநாசம் விளைவிக்கும் பாவத்தைச் செய்ய முன்வந்துள்ளனர். ஆனால், இந்தக் கேட்டை நன்கு உணர்ந்த நாம், இப்பாவத்துக்கு உடன்படாமல் பின்வாங்குவதாக ஏன் கருதக்கூடாது? குலம் அழிந்தால், குலதருமங்கள் அழிகின்றன. தருமங்கள் அழிந்தால் அதர்மம் பெருகி முழு நாசம் விளையும். இந்த அதர்மம்’ என்பதில் முதன்மையாக இருப்பது எது? குலப்பெண் கணவரிறந்தபின் மாற்றானைக் கூடும் நிலை, கற்பிழக்கும் நிலை (கணவரிறந்த பின் ஏரியில் விழுவதும், கைம்பெண் கொடுரங்களும் அந்நாள் வழக்கில் இல்லை என்று ஊகிக்கலாம்) இந்தப் பெண்கள் மாற்றாரைச் சாரும் நிர்ப்பந்தம் வரும்போது, வருணக் குழப்பம் நேரிடும், சாதி தருமங்கள் கெடும்; அதனால் குலத்தோரும் அதனை அழிப்போரும் நரகத்தில் வீழ்வார்கள். ஏனெனில், வருணக் குழப்பத்தினால், பித்ருக்களுக்குப் பிண்டத்தையும் நீரையும் அளிக்கவல்ல நீர்க்கடன் செய்வதற்குரியவர் இல்லாமல் போகின்றனர். எனவே, அர்ச்சுனன் குலநாசம் விளைவிக் கக்கூடிய பெரும்பாவத்தைச் செய்வதிலிருந்து பின்வாங்குவ தாக உரைக்கின்றனர். அவன் நோக்கில், குலநாசத்தைப் பொருட்படுத்தாத பாதகர்களான துரியோதனாதிகளுடன் போரிடுவது, அந்தப் பாவத்தைத் தாமும் செய்வதாக ஆகிறது. இச்செயலை அந்தோ கொடிய பாவம் (அஹோபத மஹத் பாபம்) எனக் குறிப்பிடுகிறான். பெண்கள், குலம், ஜாதி, வருணம் என்ற பிரிவுகளை அப்படியே காப்பதற்குரிய முக்கிய கருவிகளாகக் கருதப்பட்டனர். உண்மை நன்கு விளங்க வில்லையா? ஆசிரியர், தம் இனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் குறியாக இருந்தனர் என்று சொல்வது முற்றிலும்