பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 121 இவனே இரண்டாம் வருணத்தினன். தாமஸ் குணம், மந்தபுத்தி, சோம்பல், செயலின்மைக்கு இருப்பிடம் இந்த குணத்திற்குரியவன் ஆறியது. பழையது. ஊசியது. எச்சிலானது எதையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறான். (தாமஸ் ப்ரியம்) (அத்-17) வருணத்தவருக்குரிய கருமங்கள், கடைசி அத்தியாயத்தில் குறிக்கப்படுகின்றன. அவரவர் இயல்புக்கேற்ற கருமங்களால் பிரிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டு முதல் இரு வருணத்தினரின் தொழில்கள் குறிப்பிடப் படு கின்றன. உழவும் கால்நடை காத்தலும், வாணிகமும், இயல் பாயுண்டாகிய வைச்ய தருமங்களாகும். இட்டபணி ஏவல் செய்து அண்டிப் பிழைப்பது சூத்திரனக்கு இயல்பாயுண்டாய கருமம், தருமம்; (அத்-18) ஒரே மனிதருக்கு இயல்பில் முக்குணங்களும் உள்ளன. மேலான உயர்குண இயல்புகளை வளர்த்துக்கொள்ள முயலுவதே மனித வாழ்வின் மேன்மை, ஏற்றம் என்பது பொதுவிதி என்றாலும் இப்பொது விதியை, து.ாலமான சில கூறுகள் கட்டுப்படுத்தவில்லையா? இந்தக் குணத்தினால், இன்ன உணவை உண்பான், இப்படி இயங்குவான்; இந்தத் தொழில் அவனுக்குரியது; இதுவே ஸ்வதருமம்; இதை மீறுவது சரியல்ல என்றால் அதற்கு என்ன பொருள்? ஸத்வகுணம் ஓங்கியிருக்கும்போது மரணமடைவானாயின் ஞானவான்களின் நல்லுலகை அடைகிறான். ரஜோ குணத்தில் காலமாகிறவன் செயலூக்கம் உடையவர்களுக்கிடையே பிறக்கிறவன். தாமஸ் குணத்தில் ஊன்றி விழிப் பெய்தாமலே மரணம் எய்துகிறவர்கள் அறிவிலிகளின் கர்ப்பத்தில் பிறக்கின்றனர். (அத்-14) அவரவர் அவரவர்க்குரிய தருமத்தை, கருமத்தைச் செய்தலே நியாயம். அந்தந்தக் கருமத்துக்குரிய குணங் களிலேயே ஊன்றும் வகையில் தொழிலும் உணவும் உரியன என்று அறிவித்துவிட்டு, மூட யோனிகளில் தாமஸ்