பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 காலந்தோறும் பெண் 2. கணவனுடன் மறு உலகம் செல்பவள், மனித உடலில் உள்ள ரோமக்கால்களின் எண்ணிக்கைக்குச் சமமாக மூன்றரைக் கோடி ஆண்டுகள் சுவர்க்கம் அநுபவிக்கிறாள். 3. மகாபாவம் செய்த கணவனாக இருந்தாலும், பாம்புப் பிடாரன் பொந்தில் இருந்து பாம்பை இழுத்து விடுவதுபோல் கணவனைத் தன் பதிவிரத சக்தியினால் கொடிய நரகத்தில் விழுந்துவிடாமல் மீட்டு அவனுடன் மகிழ் உலகம் (சொர்க்கத்தில்) அநுபவிக்கிறாள். 4. கணவனுடன் உடன்கட்டை ஏறுபவள் மூன்று பரம்பரையினரின் பாவத்தைக் கரைத்து விடுகிறாள். 1) தன் தாய்வழிப் பரம்பரை, 2) தன் தந்தைவழிப் பரம்பரை, 3) புகுந்த வீடாகிய கணவன் தோன்றிய பரம்பரை. 5. கணவனையே தெய்வமாக நினைந்தொழுகும் கற்பரசி உடன்கட்டை ஏறுவதால் பதினான்கு இந்திரர் ஆளும் காலத்துக்கு சுவர்க்கத்தில் மிக உன்னதமான மகிழ்ச்சியைக் கணவனுடன் அநுபவிக்கிறார்கள். 6. எல்லா பாவங்களிலும் கொடிய பாவம் பிராம் மணனைக் கொன்ற பாவமே. (பிராம்மணத்தியை அல்ல) அந்தப் பாவத்துக்கு ஆளாகி இருந்த போதிலும் சதி உடன் கட்டை ஏறுவதன் வாயிலாக கற்பரசியின் உயிர்த்தியாகம் அத்தகைய கொடிய பாவத்தில் இருந்தும் அவனை மீட்கிறது. ஹரிதர் என்ற ரிஷி மிகவும் காட்டமாக ஒரு மாத்திரை கொடுக்கிறார்: 'உன்னால் பிற்படுத்தப்பட்ட பெண் பார்த்துக் கொள்வாள். நீ எத்தகைய பாவத்தையும் செய்யலாம்’ என்று ஆண் தட்டிக் கொடுக்கப்படுகிறான். ஆனால் பெண்ணோ “மரியாதையாகச் சிதையில் ஏறிவிடு! இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் இதுதான்!” என்று பயமுறுத்தப்படுகிறாள்.