பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 135 சக்கரவர்த்தியான பிறகு ராஜபுத்திரப் பிரபுக்களும் வீரர்களும் அவர்களுக்கு அடங்கியவர்களே. மேலும் அவர்கள் எழும்பி விரோதமான கிளர்ச்சிகள் செய்யாமல் இருக்க இந்தப் பெண் எடுப்பு பேருதவியாக இருந்திருக்கிறது. இரு தரப்பிலும் பெண் கொடுத்து, வாங்கப்படும் பரிவர்த்தனை அன்று இது. ராஜபுத்திரப் பெண்களே முகமதிய அந்தரப்புரத்தில் வாழக் கொடுக்கப்பட்டனர். இந்தியப் பெண் சுயாதீனமற்ற ஒரு வாணிபப் பொருள் போல்தான் திருமண பந்தத்திலும் இன்றளவும் கொடுக்கப்படுகிறாள். முற்றிலும் எல்லாப் பழக்கங்களிலும் மொழி மற்றும் உணவாகாரங்களிலும் வேறுப்பட்ட ஒரு சூழலில் வெளி உலகமே தெரியாது வளர்ந்த ஒரு மங்கை அடி வைத்தபோது, மாறுதலை ஏற்றுக்கொள்ள எப்படி மெளனமாகப் போராடி இருப்பாள் என்ற நினைவே என்னுள் நிறைந்தது. வரலாற்றுப் பாட நூலில் அக்பர் மத ஒற்றுமைக்காகச் செய்த இந்த அரிய மேன்மைகளுக்காகப் பாராட்டப்படுகிறார். இந்தப் பாட நூல்களில், தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு கையில் ரோஜா மலருடன் விளங்கும் மார்பளவுச் சித்ரமான பேரழகி நூர்ஜகானை முதன்மையாக அச்சிட்டிருப்பார்கள். ஆனால் அக்பர் மணந்த ஜோத்பாயின் படமும், முழு அளவில் தலையை மூடும் சீலையும், கணுக்கால் வரை தொங்கும் பாவாடை போன்ற உடையும், கொலுசு, காப்புகளும் தெரிய சிறிய அளவில் இடம் பெற்றிருக்கும். அந்த ஜோத்பாய், தாஜ்மகாலைக் கட்டச் சொன்ன மும்தாஜைவிட பேரழகி, நூர்ஜகானைவிட வரலாற்றில் சிறப்புப் பெறுபவள் என்று நினைத்தேன்.