பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 காலந்தோறும் பெண் இந்நாளில் இச்சொல், பெண்ணின் தாலி, பூ பொட்டு, சேலைக்கட்டு என்ற புறச் சாதனங்களையே குறிப்பாக்குகிறது. ஆனால் உண்மையில், இச்சொல், நல்ல மங்கலங்களை உடைய பெண்-அதாவது, உடல் பலமாக, ஒரு புருஷனைக் கூடி, மக்களைப் பெறக்கூடிய இளமையும், அதற்குரிய முழு வளர்ச்சியும், இயல்புகளும் பெற்றவள் என்ற பொருளையே குறிப்பாக்குகிறது. இது, பிற்காலத்தில் வலி யுறுத்தப் பெறும் "கட்டுக் கழுத்தி’ என்ற நிலைக்கு முன்பாக-திருமணமாகு முன்னரே ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல்லாக வருகிறது. இவள் ஆரோக்கியமுள்ளவளாக, இளமையும் எழிலும் கூடிய வளாக, மணவாழ்வை மகிழ்வோடு ஏற்கும் எதிர்பார்ப்பும் ஆவலும் உடையவளாக, நல்ல அதிர்ஷ்டம் கூடியவளாகக் காணப்படுகிறாள். (“வது” என்று குறிக்கப் பெறுவதால் இந்த மணமகள் என்று கொள்ளலாம்) இவளுக்கு எல்லா நற்பேறுகளும் இசையட்டும் என்று நீங்கள் வாழ்த்திவிட்டு உங்கள் இல்லங்களுக்குத் திரும்புங்கள் என்ற வாசகங்களையே நாம் இங்கு காண்கிறோம். இந்தத் திருமண வாசகங்கள் அடங்கிய பாடல்களில், தாலிக்கட்டோ, குங்குமத் தீற்றலோ, சேலை கொடுத்தலோ, மோதிரம் மாற்றலோ போன்ற எந்தச் சடங்கும் காணப் படவில்லை. ஸ்விதாவின் மகளான சூரியா, ஸோமனாகிய மணாளன் கைத்தலம் பற்றித் தேரேறி அவனுடைய இல்லத்துக்கு வருகிறாள். இது சூரியனின் கதிர்கள் சோமனாகிய சந்திரனில் கலந்து ஒளியூட்டும் ஒரு இயற்கை நிகழ்வின் வருணனை என்றுகூடக் கொள்ளலாம்.) Y இவ்வாறு இவள் புறப்படுமுன், சான்றோர் வாழ்த்தி ஆசி கூறிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இன்றைய ஆசீர்வாதத்தின் முதல் இரண்டு வரிகளின் பொருளும் இடமும் இவையே.