பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 153 ஆனால், இன்றைய ஆசீர்வாதங்களில் அடுத்ததாகக் காணப்பெறும் இறுதி வரி, தசாஸ்யாம் புத்ரானாம் தேஹி: பதிம் ஏகாதசம் ஜருதி!” என்பதாகும். இதன் பொருள் பத்துப் புதல்வர்களை இந்தக் கணவனுக்குப் பெற்றுத் தருவாயாக! பின்னர், இக்கணவனையே பதினோராவது புதல்வனாகக் கொள்வாய்!” இந்த வாசகம், உண்மையில், மணப்பெண், மணமகனின் இல்லத்துக்கு முன்வந்து இறங்கியதும் அவளைப் பலவாறாக வாழ்த்தும் வாசகங்களில் வருகிறது. “இந்த இல்லத்தின் அரசிபோல் நீ எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வாய், இந்த இல்லம், இதன் நாயகனான உன் கணவன், மற்றும் அவனுடைய உறவு சார்ந்த குடும்பத்தினர், கன்று காலிகள், என்று எல்லோருடனும் பொறுப்பை நிருவகித்து, அன்பால் பேணி ஆள்வாய் என்ற வாழ்த்துரையோடு, பத்துப் புதல்வர்களை இக்கணவனுக்குப் பெற்றுத் தருவாய், பின்பு பதினோராவது.உன் கணவனையே புதல்வனாகக் கொண்டு நலம் பேணுவாய்!” என்று முடிக்கப் பெறுகிறது. வேதகாலத்து வாழ்த்தே நூறாகப் பெருகட்டும்’ என்ற மொழியாக இருந்திருக்கிறது. நூறு என்ற சொல்லே மிக அதிகமான எண்ணிக்கை என்ற பொருளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பெறுவதாக நான் நினைப்பதுண்டு. இன்றும் நமது வழக்கு மொழிகளில் “நூறுதரம் படித்துப் படித்துச் சொன்னேன்; கேட்கவில்லை” என்றோ, “ஒரு நூறு நடை நடந்தேன். பணம் பெயரவில்லை” என்றோ, "நூறு” என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் (துரியோதனாதியர் நூறு பேர்’ என்பதும் அப்படித்தான் வழக்கில் வந்திருக்கும். ஒரு பெண் நூறு மக்களைப் பெற முடியுமா? என்று நினைத்ததுண்டு. அண்மையில், இந்த நூறு புதல்வர் உண்மையை நிலைநாட்ட, ஒரு தமிழ் தொலைக்காட்சி நாடகப் பாத்திரம், நூறு பேருடைய பெயர்கள் ஒப்புவிக்கக் கேட்டேன்!)