பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 காலந்தோறும் பெண் TTTTT TTTMMM TAAA AAAAALLLAAAAG TGLGGGS னெ? கன்2/7ணzம்.” என்று சைவ வைணவ ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் பெண்களின் இந்தப் பாட்டு வெறும் மங்கள வாசகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் சர்வகனம் பொருந்திய புரோகிதர், குருமார்கள் வேத வாசகங்களைச் சொல்லும்போது இவ்வாறு முரண்பாடு வருமா? - ஒருகால் இந்த இரண்டாம் பட்சப் பெண் ஜன்மத்துக்கு வேத வாக்கியத்தின் கன பரிமாணங்கள் புரியவில்லையோ? இதை நன்கு உணர்ந்த ஒரு பெரியவரிடம் கேட்க வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தேன். ஏனெனில் இந்த மாதிரியான கேட்கக்கூடாத அஞ்ஞான சந்தேகங்கள் கேட்பதே பாவமாயிற்றே! “பெண்ணாய்ப் பிறந்துவிட்டு, வேத வாசகத்துக்கு நீ சந்தேகம் கேட்கிறாய்!” என்ற அம்புதான் பாய்ந்து வரும். எனவே, சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தேன் வாய்த்தது. வேதம் ஒதி உணர்ந்த முதிய புரோகிதர் வாழ்க்கையின் நடப்பியல், உண்மை இரண்டையும் புரிந்துகொண்டவர். என்னிடம் பெருமதிப்பு உடையவர். அவர் கூறினார்: “உங்கள் சந்தேகம் சரிதானம்மா. இதில் அறிந்தவர் எவருமே இல்லை. அரைகுறைகள், அறியாமை தான் அதிகம். வேத வாசகங்கள் உச்சரிப்பு ஒலிகளினால்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. பிழைப்புக்காக, கிளிப்பிள்ளை போல் சில வாசகங்களைச் சொல்லிச் சொல்லி உருப்போட்ட பின் புரோகிதம் செய்கிறார்கள். பொருளைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? சமூக மதிப்பு இல்லாத இந்தப் புரோகிதத் தொழிலுக்கு யார் வருகிறார்கள்? வேறு கல்வி பயில முடியாதவர்கள் புத்தியும் சக்தியும் இல்லாத வயிற்றுக்கில்லாப் பிள்ளைகளை, பிழைப்பும் சாப்பாடும்