பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 159 இலவசம் என்று இந்த நிறுவனத்தை ஆதரிக்கும் பெரியவர்கள் இழுத்துப் போடுகிறார்கள். எந்தச் சொல்லைச் சொன்னால் அது உச்சரிப்புப் பிழையினால் தவறான விபரீதப் பொருளாகக் கூர்மை பெறாதோ, அதையே மங்கள வாசகமாகச் சொல்லப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவுதான். நிச்சயமாக, அது எந்த சந்தர்ப்பத்துக்கும் பொருந்தாத சரியில்லாத வாசகம்தான்!” என்றார். ஆக, இந்த வேத வாசக விஷயமும் பெண்களின் கல்யாணப் பாட்டுப் போன்ற வெறும் 'மங்கள வாசகம்’தான் என்று புரிந்த்து. ஆக, ருக்வேதப் பாடலில் காணும் சுமங்கலி என்ற சொல்லுக்கு இன்றைக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் புனைவுகள் சிறிதும் பொருந்தா. இவள், தாலி, மெட்டி, மஞ்சள், குங்குமம் முதலிய புறச் சின்னங்களால் உருவாக்கப்பட்டவள் அல்ல. கணவன் வீட்டுப் பொறுப்புக்களை ஏற்று நிறைவேற்றக்கூடிய, கன்றுகாலிகளை, மாமன்மாமி, சுற்றத்தார் அனைவரையும் பேணி, அன்பையும் வன்மையையும் பெருக்குபவளாக, கணவனுக்குகந்த திடமான பெண்மணி யாகப் பத்துப் புதல்வர்களைப் பெற்று, முதிய வயதிலும் அவனுக்குப் பணிவிடை செய்யக்கூடிய ஆரோக்கியத்தையும் பெற்றிருப்பவள்-இவளே சுமங்கலி. இந்த மங்கலங்கள் பொருந்தியவள் 'வது” என்ற மணமகளாகிறாள். 23. சப்த பதித் தோழமை "திரிசங்கு சொர்க்கம்’ என்ற சொற்றொடர்.அங்கு மில்லை. இங்குமில்லை என்ற இரண்டுங்கெட்டான் நிலையை அறிவுறுத்துவதுடன், திரிசங்கு என்ற மன்னனின் பெயரையும்