பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 காலந்தோறும் பெண் என்று ஆறு அடிகளையும் இருவரும் சேர்ந்து சொல்லும் மந்திர மொழிகளுடன் வைக்கின்றனர். ஏழாவது அடி ஒருவரை நோக்கி மற்றவர் சொல்வதாக இருவரும் இதைத் தனித்தனியே சொல்லிப் பிறகு அவையோரை-அக்கினியைத் தொழுது நிற்பதாக முடிகிறது. ஏழாவது அடி- - 7. ஓ, நீ எனது வாழ்க்கைத் துணையாக வந்து இணைந்தாய்; இந்த ஏழாவது அடியுடன். நாம் என்றென்றும் ஒருவருக்கொருவராக இணைந்து பல புதல்வர்களைப் பெற்று, அவர்களும் நீடுழி வாழத் தொழுது நிற்போம். இதுவே சப்தபதிச் சடங்கு எனப் பெறுகிறது. முன் குறிப்பிட்ட ஸாமங்கலி ரியம்வது” என்ற மொழிகள் காணப்படும் திருமண விவரங்களில் இச்சடங்கு இல்லை. என்றாலும், சப்தபதிச் சடங்கு வேத விவாகங்களில் பழங்காலத்திலேயே இடம்பெற்று-அதுவே முக்கியச் சடங்காக இருந்திருக்கிறது என்று கொள்ளலாம். இந்தச் சடங்கு தோன்றிய காலத்தில், பெண் உபநயனம் பெறும் உரிமை பெற்று, வேள்வி செய்யும் தகுதியுடையவளாக இருந்திருக்க வேண்டும். இந்தத் திருமணச் சடங்கு, பெண் பூப்பெய்திய பின், நன்கு வளர்ச்சியுற்ற பெண்ணையும், உற்ற ஆணையும் இணைக்கும் சடங்காகவே காணப்படுகிறது. LíD, GFRT’/T வாழ்க்கையின் நோக்கமாகிய பயன்களையும் அவற்றை எய்துவதற்கு இன்றியமையாத பிற கூறுகளையும் ஏழு அடிகளில் வைத்து, வாழ்க்கைப் பாதையின் நுழைவாயிலாகத் திருமணச் சடங்கை அறிவுறுத்துகிறது, இம்மொழிகள். இந்தச் சடங்கு, வடநாட்டில் முக்கியத்துவம் பெற்ற அளவுக்குக்கூட தென்னாட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்க வில்லை. இச்சடங்கு ஒன்றே திருமணத்தை உறுதி செய்த