பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காலந்தோறும் பெண் ருக்வேத காலத்தில் இல்லாத சடங்குகள் அதர்வ வேத காலத்தில் வழக்கில் வந்தன. மனைவியின் மதிப்பு, கணவனிடம் அவள் கொண்டுவரும் வண்மை வரிசைகளைப் பொறுத்து ஏற்றம் பெற்றன. 'அம்மி மிதித்தல்’ என்று பிற்காலத்தில் வழக்கில் வந்த சடங்கு துவங்கப் பெற்றது. ஒரு கல்லின்மீது தம்பதி இருவரும் ஏறி நிற்க, நீண்ட ஆயுள், உறுதியான இல்லறம் (பெண்ணும் ஆணும் பிரிந்து போவது இயல்பாக இருந்த சூழலில்) இரண்டையும் வலியுறுத்தும் வகையிலான சடங்குதான் இது. ‘மண்ணின் மடியிலே உறுதியாக அமைந்த இக்கல்லைப் போல் (மழைக்குக் கரையாமல்) நிலைத்து நீடித்து நாங்கள் வாழ, ஸ்விதா அருள் புரியட்டும்” என்ற பிரார்த்தனையுடன் இருவரும் கல்லில் ஏறி நிற்கும் சடங்கு, பிற்காலத்தில், பெண்ணை மட்டும் கணவன் 'அம்மிக் கல்லில் ஏற்றி வைத்து, இந்த அம்மியைப் போல் ஜடமாக, எத்துணை நசுக்குப்பட்டாலும் அசையாத கற்புடையவளாக இருப்பாய்’ என்று அச்சுறுத்தும் சடங்காக மாறியது. உபநிடத காலங்களில், திருமணச் சடங்குகள் இன்னும் விரிவாயின. பெண், ஆண் மகனைப் பெறுவதற் கான ஒரு கருவி போன்ற சாதனம். இவள் இனங்காவிட்டால் ஆண் வற்புறுத்தலாம் என்ற உரிமை ஆணுக்கு ஆதிக்கப் பார்வையை நல்கியது. அடுத்து, பிராம்மனங்கள் இன்னும் சில சலுகைகளை, ஆண்களுக்கே விட்டுக் கொடுத்தன. மனைவி கணவனில் சரி பாதி என்ற சரிகைக் குஞ்சம் பளபளவென்று கண்களைப் பறித்தாலும், அவன் உணவு கொண்ட பின்னரே, எஞ்சியதை அவள் உண்ண வேண்டும் என்றும், அவன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசக்கூடாதென்றும் சாத்திரக் கயிறுகள் அவள் ஜீவாதார உரிமைகளைப் பிணிக்கவும் விதிகள் எழுதப்பட்டன. (சதபதப்ராம்ணம்)