பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 165 பின்னர் தரும சூத்திரங்கள் என்ற கோட்பாடுகள் தொடுக்கப்பட்ட காலத்தில் திருமணச் சடங்குகள் பூரணமாக மனைவியை, சிறுமியை பொம்மையாக்கித் தீர்த்தன. கணவன் நூற்றாண்டு வாழட்டும் என்று, எரி வளர்த்துத் தேவர்களை வேண்டும் வேள்வியைக் கூட மணமகள், தன் சகோதரன் உதவியுடன் திருமணத்துக்கு முன்பாகச் செய்கிறாள். இதுவும் தாலி கட்டிய பின்னர் அவள் செய்யும் சடங்காக, லாஜ ஹோமம்’ மணமகளின் சகோதரன் பொரியிடல் என்ற பெயரில் இன்றும் வழக்கில் இருக்கிறது. திருப்பாவை அருளிய கோதை நாச்சியார் தம் கனவைச் சொல்கையில், தாலியைப் பற்றியோ குங்குமம் தீற்றுவது பற்றியோ குறிப்பிடவில்லை. ஆனால்-அம்மி மிதித்தலையும், பொரியிடுவதையும் குறிப்பிடுகிறார். வேத காலத்து சப்த பதியில் இருந்து வேறுபடும் வகையில், தொடர்ந்து வந்த காலங்களில் மந்திர வாசகங்கள் முற்றிலும் மாற்றப்பட்டன. இவ்வாசகங்கள் அனைத்தும் கணவன் மனைவிக்குச் சொல்லும் மொழிகளாகவே அமைந்து, அவளைக் குரலற்றவளாகத் தீர்த்திருக்கின்றன. 1. விஷ்ணு உனது உணவின் தேவையை நிறைவேற்ற முதல் அடியை எடுத்து வைப்பாய். 2. விஷ்ணு உனது உடல் வலிமையைக் கூட்ட இரண்டாம் அடியை எடுத்து வைப்பாய். 3. விஷ்ணு உனது விரதங்கள்-தவங்களை நிறைவேற்ற, மூன்றாம் அடிக்கு உன்னைக் கொண்டு செல்லட்டும். 4. விஷ்ணு, உனது நான்காம் அடியை நட்பின் மலர்ச்சியுடன் அழைத்துச் செல்லட்டும். 5. விஷ்ணு, உனது ஐந்தாவது அடியை, கன்றுகாலி களாகிய வளர்ப்புப் பிராணிகளின் நலன்களை முன்னிட்டு அழைத்துச் செல்லட்டும்.