பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 காலந்தோறும் பெண் பிரும்மவாதி என்று போற்றப்படுபவர், இந்து சட்டவிதிகளாகிய தரும சாத்திரங்களை நெறிப்படுத்தியர் என்று புகழ்பெற்ற யாக்ஞவல்க்யர், ஜனகனின் அவையில் இருக்கையில் கார்க்கி அவரை நாடி வருகிறாள். இன்றும், பண்டைய வேதகாலப் பெண்மணிகளின் சிறப்பைச் சொல்கையில், 'மைத்ரேயி, கார்க்கி போன்ற பெண்மணிகள்’ என்றே குறிக்கப்படுவதைப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த இரண்டு பெண்மணிகளின் வரலாற்றிலும் யாக்ஞவல்க்யர் வருகிறார். பிருஹத்தாரணிய உபநிடதத்தில் - ஆறாவது பிராம்மணம், கார்க்கியை வாசக்னு என்பவரின் மகளாக அறிவிக்கிறது. இவளுக்குத் திருமணமாயிருந்ததாகக் குறிப்பு இல்லை. இவள் உபநிடதத் தொகுப்பில் அழியா இடம் பெறுவதற்குக் காரணம், இவள் பெண்களுக்குத் தகாதது என்று தடுக்கப்பட்டாற் போலிருந்த அறிவுப்பாதையில் தனது சிந்தனையைத் திருப்பியதுதான். ஒரு பெண்ணாகப் பிறந்தவள், ஜனகரின் பேரறிவாளர் நிறைந்த அவையில் சிறந்த பிரும்ம தத்துவ மேதையாகிய யாக்ஞவல்க்யரிடம் அந்த ‘பிரும்மம்' பற்றிய ஐயப்பாட்டை எழுப்பினாள் என்றால், அது சாதாரண விஷயமா? “நான் உம்மிடம் சில ஐயங்களைப் போக்கிக்கொள்ள விழைகிறேன்” என்று கூறும் கார்க்கி, அவரை ஏதோ சவாலுக்கு அழைப்பது போல் தொனிக்கிறது. யாக்ஞவல்க்யர் ஒப்புக்கொள்கிறார். உரையாடல் தொடங்கியது. ங்கி ஒ, யாக்ளு? இந்த நானிலம் நீரடுக்குகளின் பரப்பில் நிலைபெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆதாரம் எங்கு நிலை கொள்கிறது?” “கார்க்கி, நீர் வாயுவின் அடுக் கில் நிலை கொண்டிருக்கிறது.”