பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காலந்தோறும் பெண் என்ற வருக்கங்களாகப் பிரிவுபட்ட பின் இந்த வருக்கபேதம் நிலைத்தாலே, பிரபு வருக்கமும், அரச வருக்கமும் தங்கள் போக வாழ்க்கையை நடத்த முடியும் என்று வந்த அவசியங் களை விவரிக்கிறார். உழைத்துப் பிழைக்கும் வருக்கம் தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்துவிடா வண்ணம், மாயமான பரலோகக் கற்பிதங்களில் அவர்கள் மனங்கள் அமிழ்ந்துவிடும் வகையில், தத்துவங்கள் கற்பிக்கப்பட்டன. என்று விளக்குகிறார். அந்த வகையில், அவர் எழுதிய வரலாற்றுச் சித்திரங்களான-"வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலில், இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். 'பிரும்மம் என்ற புதிரை, அடுத்து வரும் தலைமுறைகள் முழு முதலாக வைத்துக்கொண்டு கவலையின்றி, வருக்கபேத சமுதாயத்தை ஆளமுடியும் என்றே தோற்றுவித்ததாகக் குறிப்பாக்குவார். இந்தப் புதிரை உடைக்கும் வகையில் கார்க்கி எழுப்பிய வினாக்கள், பிரும்மவாதிகளான-காவலர்களான, மேலாம் வருக்கத்தாருக்கு அடிமடியில் கைவைத்த திகிலையும் ஆத்திரத்தையும் கிளப்பியதில் வியப்பில்லையே? “கார்க்கி ! இது வெறும் அச்சுறுத்தல் அன்று ! நிச்சயமாகவே நீ மேலும் வினாக்களைத் தொடுத்திருந்தால், உன் தலை உருண்டிருக்கும்!” என்று கார்க்கியின் அத்தையான மூதாட்டி கூறுவதாக அவர் எழுதியுள்ளார். ஆனால், இத்தகைய வரலாறுகள் இடம் பெறுகையில், ஒரு பக்கம் வரலாறு என்ற நிலையில் நிகழ்வுகள் குறிப்பாக்கப்பட்டாலும், ஆணாதிக்க சமுதாயம் வலுப்பெற்ற நிலையில் தொகுக்கப்பட்ட இந்த நூல்கள், இவ்வாறு கார்க்கியின் வினாக்கள் அச்சுறுத்தலோடு மடக்கப்பட்ட சம்பவத்தை முடித்துவிட இடம் கொடுக்கவில்லை. இதே உபநிடதத்தில் எட்டாம் பிராம்மணத்தில் மீண்டும் வருகிறது.