பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 காலந்தோறும் பெண் துறந்து இறுதித் தவம் மேற்கொள்ளக் காட்டுக்குச் செல்லுமுன் தனது சொத்துக்களை இரு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினார். அப்போது, மைத்ரேயி மட்டும் 'இந்த சொத்துக்களினால் என்ன பயன்? மேலாம் பிரும்மஞானம் மட்டுமே தங்களிடம் நான் பெற விரும்புகிறேன்.” என்றுரைத்ததாகவும், அவர் அவளுக்கு அந்த அறிவை நல்கியதாகவும் வரலாறு. இதனால், மைத்ரேயி, பட்டுப் பட்டாடை, செல்வம், பிள்ளை என்ற உலகியல் அநுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஞானத்தை வேட்டவள் என்று வரலாற்றில் புகழ் பெறுகிறாள். யாக்ஞவல்க்யரும் போற்றப்படுகிறார். இத்தகைய பெண்கள் அடிக்கடி வந்துவிட்டால்? திருமணம், இக உலகப் பேறுகள் என்று சொல்லப்படும் அறிவு மறைக்கும் பட்டுக் குஞ்சலங்களின் உட்பொருள் அவர்களுக்கு விளங்கிவிட்டால்? எனவே, பெண்ணுக்குத் திருமணம் சார்பு நிலை, தான் தருமம் என்று வலியுறுத்தப்படுவதற்கும் மேலாக, திருமணமாகாமல் நிற்பதனால் சமுதாய ஒழுக்கத்தையே குலைக்கிறாள் என்ற நோக்கில் ஒர் அம்பு செருகப்பட்டது. பெண்ணாய்ப் பிறந்ததன் பாவமே ஒர் ஆண் குழந்தைக்குத் தாயாவதில்தான் விலகுகிறது! இந்த ஆண் குழந்தையைத் திருமணத்தின் வாயிலாகவே பெறமுடியும். திருமணம்...! அவளுக்கு அறிவு தேவையில்லை; உடல்வாகு, அடக்கம், பணிவு, பொறுமை, உழைப்பு, தியாகம். திருமணமாகாமலே சமுதாயத்தில் நிற்கவேண்டிய நிலை வந்துவிட்டால்? இப்படியும் ஒரு நிலை இருந்திருக்க ஆதாரம் இருக்கிறது. ஏனெனில் யமனே! நீ ஏற்றுக் கொள்வாய்! இவளை உனக்கு அர்ப்பணிக்கிறோம்! என்ற பொருளில், அவளை