பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 175 யமனுக்கு மணவாட்டியாக்கும் ஒரு பாடல் வருகிறது. இதற்குச் சரியான பொருள் விளக்கப் படவில்லை. திருமணமாகாத பெண், உயிர் வாழக்கூடாது; அவள் யமனுக்கு மணவாட்டியாகப் போகலாம் என்று நமது வைதீக சமயத்தார் வழிகாட்டுகிறார்களா? இதனால்தான் போலும், இந்த இருபதாம் நூற்றாண்டு இறுதிக்கட்ட சமயகுரு ஒருவர், இந்து சமுதாயத்தில் கன்னிப் பெண் வாழ இடம் கிடையாது: எனவே ஒரு வாழை மரத்தை உரித்துத் தாலியைக் கட்டிக்கொண்டு, மரத்தை வெட்டி, தாலியைக் களைந்து வைதவ்யக் கோலம் மேற்கொண்டு வாழலாம் என்று கருணையுடன் திருவாய் மலர்ந்தருளினாரா என்று புரியவில்லை! 'வளர்ந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்வது ஒரு கூடை பாம்பை வைத்துக் கொண்டிருக்கும் அபாயம்!’ என்று இல்லறம் நடத்தும் பெற்றோருக்கு 'தரும’க் கட்டாயம் அறிவுறுத்தப்படுவதும் இதனால்தானோ? 25. பொருளுரிமைக்காரிபொருளேயானாள் “.ஐயர் இருக்கிறாரா 2...” “இல்லையே? வெளியூர் போயிருக்கிறார். வர ஒரு வாரம் ஆகும்” என்று முன்னுச்சி நரைத்த அவர் மனைவி கூறுகிறாள். “இருபத்தெட்டாந் தேதி ஒரு ஃபங்ஷன். ஒரே நேர விருந்து. ஜாங்ரி போடணும். நூற்றைம்பது பேருக்குச் சாப்பாடு. அதனால் அட்வான்ஸ் சொல்லி தந்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”