பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. விழிமின்! எழுமின்! "அம்மா, கனவிலே பாட்டி வந்தாங்க... நல்லா இருக்கிறியான்னு கேட்டாங்க?” என்று அருமை மகள் கூறும்போது தாய் மகிழ்ச்சியுடன் ‘அப்படியா?’ என்று கேட்கவில்லை, பாட்டி, மங்கலமில்லாதவள். கைம்பெண். "அப்படியாம்மா? நல்லாருக்கியான்னு கேட்டாளா? மாரியம்மன் கோயில்ல கற்பூரம் கொளுத்தி வச்சுக் கும்பிடம்மா? ஒண்ணும் வராது!” என்று தாய் மகளின் தலையில் பரிவுடன் கையை வைக்கிறாள். "ஏம்மா? பாட்டிதானே வந்தாங்க?” ஆமாம்மா. மாரியம்மாதா வந்திருக்கிறதாச் சொல்வாங்க. ஊரில், அங்க இங்கே அம்மை பூட்டிருக்கு. நாம பயப்படக் கூடாது. அவ நல்ல படியாப் பார்த்துப்பா...” என்று மாரியம் மனைத் தஞ்சம் அடைகிறாள். இது என்ன நம்பிக்கை? கனவிலே கட்டுக்கழுத்தி வந்தால் தெய்வ ஆசீர்வாதம், கைம்பெண் வந்தால் மாரித்தெய்வத்தின் அச்சுறுத்தலா? தாய் வழிபாடு, தந்தைவழிச் சமுதாயமாக வந்த ஆரியர்களிடம் முதலில் இருந்ததில்லை. இந்தியப் பழங்குடி மக்களுடன் போராடியும், வென்றும், சமரசம் செய்து கொண்டும், அந்தப் பழங்குடி மரபுகளையும் கலாசாரங் களையும் தங்கள் கலாசாரங்களோடு ஏற்றுக்கொண்ட விளைவுகளையும் என்று ஊகிக்கும்படி, இன்று நம்மிடையே பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. ருக் வேதப் பாடல்களில் பெண் தெய்வங்கள் போற்றப்பட்டாலும், இயற்கையின் ஆற்றல்களின் மாண்புகளே, அத்தெய்வங்களுக்கு வடிவாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.