பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 185 கெடுதல், அச்சுறுத்தல், உயிர்ப்பலி ஆகிய கூறுகளை அத்தெய்வ வழிபாடுகளில் காண முடியவில்லை. மனிதன் முதன்முதல், இறப்பையும், பிறப்பையுமே தன் அறிவுக்கு எட்டாத பெருவியப்புக்குரிய நிகழ்வுகளாகக் கண்டான். ராஹால்ஸாங்க்ருத்யாயன், தம் மனித சமுதாயம்’ என்ற நூலில் கூறுகிறார்: மனிதன் அடிபட்டதும், குருதி பெருகுகிறது: குருதி பெருகி ஒடியபிறகு, அவன் சத்திழந்து, வீழ்ந்து, மரணநிலையை அடைந்துவிடுகிறான். இதற்குப் பிறகு அவனை எழுப்ப முடியவில்லை. எனவே, குருதி அவன் அறிவுக்கு விலைமதிப் பற்ற பொருளாயிற்று. இதேபோல், பிறப்புக்குக் காரணமாக அவன் பெண்ணின் பிறப்புறுப்பை அற்புதமாகக் கருதினான். அந்தச் சின்னத்தையே வணங்கத் தலைப்பட்டான். இதுவே பின்னர், ஆணின் உறுப்புடன் சம்பந்தப்படும் இணைவாகலிங்க வடிவாயிற்று என்று கருத்துரைப்பார். தாய் வழிபாடும், குருதிப் பலியும், ஆதிச் சமுதாயத்தின் முதல் அச்சங்களைத் தவிர்த்துக் கொள்ளும் இறை நம்பிக்கைகளாக உருவெடுத்தன. இந்தத் தொல் குடியினரின் மரபுகள் தாய்வழிச் சம்பிர தாயங்கள், இங்கே நிலவியபோது, தந்தையாண்மை சமுதாயத்தினரான ஆரியர் வந்ததும், நிகழ்ந்த மாற்றங்களும் பல்வேறு சான்றுகளால் குறிப்பிடப்பட்டிருப்பதை இதுகாறும் கண்டோம். சுருங்கக் கூறினால் இந்தச் சமுதாய வரலாறே, பெண்ணின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி, அவள் இயக்கங்களை ஒருவழிப்படுத்த, ஒர் அடிமை மனப் பான்மையில் நிறைவுகொள்ள, பதப்படுத்தும் வரலாறாகவே வந்திருக்கிறதெனலாம். இந்தியாவில் தாயர் உரிமை நூலை எழுதிய, அறிஞர் எவர்ரென்ஃபெல்ஸ், குழந்தை மணம், ஆண் மேல்நிலைத்