பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 187 படுகிறது. இந்த வரலாற்றின் பின்பகுதியில் ரேணுகா, தெய்வமாகிறாள். ஒரு தேவனுக்குத் தேவி என்றில்லாத ஆங்காரத் தேவதை தலைமட்டுமே தெரியும் அம்மன் உருவங்கள் பலவும் இவ்வாறு தாயுரிமை அழிக்கப்பட்ட வரலாற்றின் சின்னங்களாக, தந்தையாதிக்கம்-பின்னர் ஆணாதிக்கச் சமுதாய தெய்வங்களில் உயர்வரிசைகளில் இல்லாவிட்டாலும் குடித் தெய்வங்களாக, ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அநியாயமாகப் பறிக்கப்பட்ட உயிர் என்ற வகையில் இத்தெய்வங்களின் கோபமே மனிதருக்கு ஏற்படும் நோய், பிணிகளுக்கெல்லாம் காரணம் என்ற கருத்தும் நம்பிக்கையும் தோன்றியிருக்க வேண்டும். பாரதம் போன்ற வெப்பப் பிரதேசத்தில் ஏற்படும் அம்மை நோயின் கடுமைக்கு ஆதியிலேயே இவ்வாறு தேவனற்ற ஒரு தெய்வம் காரணமாக நம்பப்பட்டு வந்திருக்கிறது. உயிருடனிருக்கும்போது செய்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக அவளைத் தெய்வமாக்கிவிடும் நடப்பே இங்கு தொடர்ந்து வந்திருக்கிறது என்று கருதலாம். ருக்வேதப் பெண் தெய்வங்கள், பல புதல்வர்களுக்கு அன்னையராக, சகோ தரிகள் புதல்வியர் என்ற நிலையில் விளங்குகின்றனர். ஆனால், கொற்றவை, பகவதி, போன்ற இந்தத் தெய்வங்கள் அவ்வாறு ஆண் தொடர்பு இல்லாத நிலையில், உக்கிர சக்தி வடிவங்களாகவே திகழ்கின்றனர். பிற்காலத்தில், இந்த இரு மரபுகளும் இன்னும் பந்தப்படும் வகையில், காளி, பரமசிவனின் தேவியென்றும் திருமாலின் சோதரி என்றும் சமுதாயத்தின் உயர்வருண-மேல்படி மக்களும் வழிபடற் குரியவர்களாக இணைக்கப்பட்டனர் என்று ஊகிக்கலாம். சிவசக்தி நடனம் என்ற ஒரு புராண வரலாறு, இன்றும் தில்லை நடராசப் பெருமானையும், அங்கு ஏற்கெனவே கோயில் கொண்டிருந்த எல்லைக் காளியையும்