பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 41 என்றெல்லாம் பலவாறாக இவள் சுறுசுறுப்பாய் மண்ணகத்து உயிர்களைத் துயிலெழுப்பும் நேர்த்தி பாடப்படுகிறது. இவள் புராணியாய் என்றும் குன்றா இளமையும் வண்ணமுமாய், புதுமகளாய் நிதம் நிதம் குறித்த நேரம் தவறாமல் தோன்றுகிறாள். செல்வத்தை அன்றாடம் கரைக்கும் சூதாட்டக் காரனைப் போல் மாந்தர் தம் வாழ்நாளை மெலியச் செய்வதாகவும் ஒரு குறிப்பு வருகிறது. இவள் தன் காதலனின் ஒளிக் கிரணங்கள் பட்டதும் முகம் சிவக்கப் பூரிக்கிறாள். மண்ணகத்துக் கன்னியர் கட்டுப்படாத சுதந்திர நிலையில் நடமாடுகையில் தொடர்ந்து செல்லும் இளைஞர்களைப் போல், இவளையும் பல தேவர்கள் தொடர்ந்து வருகின்றனராம். ஆனால் இவளோ மனம் கவரும் காதலன் நெருக்கத்திலே முகம் சிவக்கப் பூரிக்கிறாள். அந்தக் காதலன் ஒளியோனாகிய சூரியன்தான். அக்னியும் இவளுக்குக் காதலன், சந்தித் தேவர்களாகிய அசுவினி தேவர்களென்ற இரட்டையர்க்கும் இவள் உகந்தவள். சந்திரனுடன் தொடர்பு கொண்டவளாகவும் பேசப்படுகிறாள். ராத்ரி-இரவுத் தேவதையாகத் துதிக்கப்படுகிறாள். ஒரே ஒரு பாடல்தான் இவளுக்கு உரியது. உவுையின் இளைய சோதரியாக இவளும் வானவனின் புதல்வியாக வருணிக்கப்படுகிறாள். இவள் இரவுக்குரியவளாக இருந்த போதிலும் நட்சத்திரங்களாகிய ஆயிரம் கண்களுடன் ஒளிர்ந்து மலை முகடுகளையும் இருண்ட பள்ளத்தாக்குகளையும் அவ்வொளியால் இருளகற்றுபவளாகவே சித்திரிக்கப் படுகிறாள். மக்களெல்லாரும் இவள் வரவை உணர்ந்ததும் தத்தம் இல்லங்களுக்கு விரைகின்றனர். உழைப்பின் களைப்பை நீக்கிப் புத்துயிரளிக்க இவள் மாந்தரை மட்டுமி ன்றி நாற்காலிகளாகிய விலங்கினங்கள் பறவையினங்களையும் ஒய்வு கொள்ளச் செய்து அவர்கள் மீது தீமையின் நிழலும் படியாமல் பாதுகாக்கிறாள்.